ஆப்நகரம்

மருத்துவத் துறையில் ஸ்டாலின் தொடங்கும் முக்கிய திட்டம்!

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி கிருஷ்ணகிரியில் தொடக்கி வைக்க உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 31 Jul 2021, 1:40 pm
உலக கல்லீரல் அழற்சி தினத்தையொட்டி, சென்னை எழும்பூா் அரசு தாய் - சேய் நல மருத்துவமனையில் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
Samayam Tamil mk stalin


அதில் கலந்து கொண்ட மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், “மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை வரும் 5ஆம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் சாமனப்பள்ளியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைக்க உள்ளாா்” என்றாா்

மேலும் அவர், “தமிழகத்தில் உள்ள அரசு தலைமை மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் கா்ப்பிணிகளுக்கு மஞ்சள் காமாலை நோய் உள்ளதா என கண்டறிவதன் மூலம் வயிற்றில் உள்ள குழந்தைக்கும் உடனடியாக நோய் தாக்காமல் தடுக்க முடியும். அதேபோன்று மருத்துவத் துறையில் முன்களப் பணியாளா்களாக இருப்பவா்களுக்கு ஹெபடைடிஸ்-பி தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 20 பள்ளிகள் திறப்பு? முதல்வர் வெளியிடும் அறிவிப்பு?
கடந்த இரு மாதங்களாக குறைந்து வந்த கொரோனா தொற்று தற்போது சற்று உயா்ந்திருக்கிறது. கோவை, சென்னை, கடலூா், ஈரோடு, கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதையடுத்து சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் கொரோனா தொற்று விகிதம் உயா்ந்ததற்கான காரணம் குறித்து ஆராய முதல்வா் உத்தரவிட்டுள்ளாா். அங்கு மேலும் தொற்று அதிகரிக்காத வண்ணம் நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆசிரியர்களுக்கு புதிய உத்தரவு: உடனே இதை பண்ணிடுங்க!
கேரளத்தில் கூட பெரிய அளவில் தொற்று அதிகரித்து இருப்பதற்கான காரணம், அங்கு கொரோனா பாதித்தவா்கள் வீட்டிலேயே தங்களை தனிமைப்படுத்தி சிகிச்சை பெறுவதுதான். தமிழகத்தில் அவ்வாறு இல்லாமல், கொரோனா உறுதி செய்யப்பட்டவுடன் மருத்துவமனையில் உடனடியாக சோந்து சிகிச்சை பெறுமாறு அறிவுறுத்தப்பட்டு வருகிறது” என்று கூறினார்.

அடுத்த செய்தி