ஆப்நகரம்

ஆதிவாசிளுடன் ஆட்டம் போட்ட எம்எல்ஏ ஆறுகுட்டி

கோவை மாவட்டம் ஆனைகட்டி மலை கிராமத்தில் உள்ள ஆதிவாசி மக்களுடன் எம்.எல்.ஏ ஆறுகுட்டி நடனமாடி மகிழ்ந்தார்.

TNN 17 Oct 2017, 9:02 pm
கோவை மாவட்டம் ஆனைகட்டி மலை கிராமத்தில் உள்ள ஆதிவாசி மக்களுடன் எம்.எல்.ஏ ஆறுகுட்டி நடனமாடி மகிழ்ந்தார்.
Samayam Tamil mla arukutty dances with adivasi tribes
ஆதிவாசிளுடன் ஆட்டம் போட்ட எம்எல்ஏ ஆறுகுட்டி


கோவை மாவட்டம் ஆனைகட்டி மலையில் உள்ள தூமனூர் கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட ஆதிவாசி மக்களின் குடும்பங்கள் உள்ளன. சுமார் 200 ஆதிவாசி மக்கள் அங்கு வசிக்கின்றனர். நீண்ட காலமாக இந்த கிராமத்திற்கு மின்சார வசதி இல்லாமல் இருந்தது.

இந்நிலையில், தற்போது தூமனூர் கிராமத்திற்கு ரூ.40 லட்சம் செலவில் 80 மின் கம்பங்கள் மலைப்பாதையில் அமைக்கப்பட்டு மின்சார வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மின்சாரம் தங்கள் கிராமத்திற்கு வந்ததை இக்கிராமமக்கள் திருவிழாவாக கொண்டாடினர்.

இதில் கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ. ஆறுகுட்டி, வனத்துறை மற்றும் மின்சார வாரிய அதிகாரிகள் பங்கேற்றனர். விழாவில் எம்.எல்.ஏ ஆறுகுட்டி ஆதிவாசி மக்களின் நடனத்தில் இணைந்துகொண்டார். அதைப் பார்த்து வனத்துறை அதிகாரி ஒருவரும் உற்சாக மிகுதியால் நன்கு ஆட்டம் போட்டார்.

எம்.எல்.ஏ. ஆறுகுட்டி இதே போல ஆர்.கே.நகர் தொகுதியிலும் கடந்த ஏப்ரல் மாதம் ஆட்டம்போட்டது நினைவுகூரத்தக்கது.

அடுத்த செய்தி