ஆப்நகரம்

யாரைக் கேட்டு கூட்டம் போட்டார்கள் ... தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,வெற்றிவேல்!!

''சசிகலா, டிடிவி தினகரன் இல்லாத அதிமுகவை பார்க்க முடியாது'' என்ற அதிமுக அம்மா அணி எம்.எல்.ஏ., வெற்றிவேலின் திடீர் பேச்சால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

TOI Contributor 18 Apr 2017, 2:45 pm
''சசிகலா, டிடிவி தினகரன் இல்லாத அதிமுகவை பார்க்க முடியாது'' என்ற அதிமுக அம்மா அணி எம்.எல்.ஏ., வெற்றிவேலின் திடீர் பேச்சால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Samayam Tamil mla vetrivel is supporting ttv dinakaran and sasikala
யாரைக் கேட்டு கூட்டம் போட்டார்கள் ... தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,வெற்றிவேல்!!


அதிமுகவில் சசிகலா தலைமையில் அதிமுக அம்மா அணியும், முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் தலைமையில் அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணியும் உள்ளன. இந்த இரண்டு அணிகளும் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் களத்தில் இறங்கின. இதைத் தொடர்ந்து இவர்களுக்கு இடையே கடுமையான போட்டி நிலவியது. இந்நிலையில், அதிமுக அம்மா அணி வேட்பாளர் டிடிவி தினகரன், ஓட்டுக்கு பணம் அளித்த குற்றச்சாட்டின் கீழ், அந்த தேர்தலை தலைமை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது. மேலும், இரட்டை இலையை மீட்க சுகேஷ் சந்தர் என்ற இடைத்தரகருக்கு தினகரன் ரூ. 50 கோடி பேரம் பேசினார் என்ற குற்றச்சாட்டும் சேர்ந்து கொண்டது. இந்தக் குற்றச்சாட்டில் சுகேஷ் கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார். தினகரன் மீதும் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, கடந்த இரண்டு நாட்களாக அதிமுகவில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. முக்கியமாக அதிமுகவின் இரட்டை இலையும் முடக்கப்பட்டுள்ளது. இரட்டை இல்லை சின்னத்தை மீட்க வேண்டும் என்பதால், நாங்கள் இணைய இருக்கிறோம் என்று மூத்த அமைச்சர்கள் நேற்று கூடி பேசி அறிவித்தனர். முன்னதாக, இரண்டு அணிகள் இணைய பன்னீர் செல்வமும் அழைப்பு விடுத்து இருந்தார்.

இந்நிலையில், இன்று பேட்டி அளித்த அதிமுக எம்.எல்.ஏ., வெற்றிவேல், ''எங்களது அணியில் 122 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். சசிகலா, டிடிவி தினகரன் இல்லாத அதிமுகவை எங்களால் பார்க்க முடியாது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருக்கும்போது, அவரது வீட்டில் அல்லது தலைமைக் கழகத்தில்தான் கட்சியின் கூட்டம் நடக்கும். அந்த வகையில்தான் டிடிவி தினகரன் வீட்டில் சந்திப்பு நடந்து வருகிறது. அதேசமயம், பன்னீர் செல்வம் அணியினர் பதவி கேட்கின்றனர். இதை ஏற்றுக் கொள்ள முடியாது'' என்று தெரிவித்துள்ளார்.

இதனால் எந்த முடிவுக்கும் வர முடியாமல் சசிகலா அணியினர் முற்றிலும் குழம்பி, தினகரனின் பின்னணியில்தான் உள்ளனர் என்பதைக் காட்டுகிறது.

MLA Vetrivel is supporting TTV Dinakaran and Sasikala

அடுத்த செய்தி