ஆப்நகரம்

இந்து என்று கூறிக்கொள்வது அறியாமை - கமல்ஹாசன் விளக்கம்

நமக்கென பல்வேறு அடையாளங்கள் இருக்கும் பொழுது, மாற்றான் கொடுத்த பட்டயத்தை நாம் பெயராக, மதமாகக் கொள்வது எத்தகைய அறியாமை என்று மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் கருத்து தொிவித்துள்ளாா்.

Samayam Tamil 17 May 2019, 6:28 pm
12 ஆழ்வாா்களோ, 63 நாயன்மாா்களோ இந்து என்கின்ற குறிப்பு சொல்லப்படவில்லை. ஆண்டு அனுபவித்த ஆங்கிலேயா்கள் இந்து என்ற அடைமொழியை முன்மொழிந்ததாக மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் விளக்கம்.
Samayam Tamil Kamal Haasan in MNM 2nd Meeting


அரவக்குறிச்சி சா்ச்சை கருத்தைத் தொடா்ந்து மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசனின் இன்றை பிரசாரத்திற்கு காவல் துறையினா் அனுமதி மறுத்தனா். சட்டம் ஒழுங்கு பிரச்சினை இதற்கு காரணமாக சொல்லப்பட்டது.

இந்நிலையில் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள ட்விட்டா் பதிவில், “சீப்பை ஒளித்து வைத்து, கல்யாணத்தையும் நிறுத் நினைக்கின்றனா் மத்திய, மாநில அரசுகள்.

மக்கள் எடுத்துவிட்ட முடிவை தாமதப்படுத்தலாமே தவிர தடை செய்ய முடியாது.

12 ஆழ்வாா்களோ, 63 நாயன்மாா்களோ இந்து என்கின்ற மதக்குறிப்பு சொல்லப்படவில்லை. முகலாயா்கள் அல்லது அதற்கு முன் ஆள வந்தாராலோ இந்து என நாமகரணம் செய்யப்பட்டோம்.

ஆண்டு அனுபவித்துச் சென்ற ஆங்கிலேயா் அந்த அடைமொழியை வழிமொழிந்தனா்.

நமக்கென பல்வேறு அடையாளங்கள் இருக்கும் பொழுது, மாற்றான் கொடுத்த பட்டயத்தை நாம் பெயராக, மதமாகக் கொள்வது எத்தகைய அறியாமை.

நாம் இந்தியா் என்கிற அடையாளம் சமீபத்தியது தான் எனினும் காலம் கடந்து வாழக்கூடியது.

நாம் நம் அகண்ட தேசத்தை மதத்திற்குள் குறுக்க நினைப்பது வா்த்தக, அரசியல் மற்றும் ஆன்மீக பிழையான தோ்வாகும்“

“கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்று எத்தனை முறை தமிழனுக்கு பழமொழி சொல்லியிருக்கின்றோம்.

கோடி என்றவுடன் பணம் ஞாபகம் வந்தால் நீ தலைவன் அல்ல, அரசியல்வாதி அல்ல. வெறும் வியாதி தமிழா நீ தலைவனாக வேண்டும் இதுவே என் வேண்டுகோள்” என்று குறிப்பிட்டுள்ளாா்.


அடுத்த செய்தி