ஆப்நகரம்

கொங்கு மண்டலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள தயாரான கமல் ஹாசன்!

மக்கள் நீதி மய்யம் சார்பில் கொங்கு மண்டலத்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

Samayam Tamil 15 Apr 2018, 6:34 pm
சென்னை: மக்கள் நீதி மய்யம் சார்பில் கொங்கு மண்டலத்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
Samayam Tamil கமல் ஹாசன்


நடிகர் கமல் ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் புதுக் கட்சி தொடங்கியுள்ளார். இதற்கான முதல் கூட்டத்தை மதுரையில் நடத்தினர்.

அங்கு கட்சிப் பெயர், கொடி, நிர்வாகிகள் குறித்து அறிவிக்கப்பட்டது. இதையடுத்து திருச்சியில் பொதுக் கூட்டம் நடத்தினார்.

இந்நிலையில் தனது அடுத்தக் கட்ட சுற்றுப் பயணம் குறித்து, கமல் ஹாசன் அறிவித்துள்ளார். அதன்படி கொங்கு மண்டலம் நோக்கி தனது பார்வையை திருப்பியுள்ளார்.

வரும் மே 11ஆம் தேதி சேலத்திலும், மே 12ஆம் தேதி திருப்பூரிலும் மக்களை சந்திக்கிறார். இதற்கடுத்து மே 13ஆம் தேதி கோவையில் பொதுக்கூட்டம் நடத்தவும் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

MNM leader Kamal Haasan travels to Covai and Tiruppur.

அடுத்த செய்தி