ஆப்நகரம்

சென்னையில் மிதமான மழை: ஓரளவு நிம்மதியடைந்த மக்கள்!

சென்னையில் இன்று பல இடங்களில் மிதமான மழை பெய்துள்ளது.

TNN 9 Jul 2017, 8:48 pm
சென்னையில் இன்று பல இடங்களில் மிதமான மழை பெய்துள்ளது.
Samayam Tamil moderate rain in various places in chennai
சென்னையில் மிதமான மழை: ஓரளவு நிம்மதியடைந்த மக்கள்!


வளிமண்டல மேலடுக்கில் ஏற்பட்டுள்ள சுழற்சி காரணமாக தமிழகத்தில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்திருந்தது. கடந்த 3 மாதங்களாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி வதைத்த நிலையில், பரவலாக மழை பெய்து வருகிறது. தென்மேற்குப் பருவமழையையொட்டி தமிழகத்தில் மட்டும் இதுவரை 56 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

இந்நிலையில் ஆந்திராவின் கடற்கரைப் பகுதியின் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியிருந்தார். மேலும், சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இன்று சென்னையில், தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், சேலையூர் ஆகிய இடங்களில் மிதமான மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி