ஆப்நகரம்

ஸ்கூட்டர் மானிய திட்டத்தை தொடங்கி வைக்க பிரதமர் மோடி தமிழகம் வருகை!

தமிழக அரசின் ஸ்கூட்டர் மானிய திட்டத்தை, வரும் 24ல் பிரதமர் மோடி துவங்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 19 Feb 2018, 3:33 pm
தமிழக அரசின் ஸ்கூட்டர் மானிய திட்டத்தை, வரும் 24ல் பிரதமர் மோடி துவங்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil modi inaugurates amma two wheeler plan on jayalalitha birthday
ஸ்கூட்டர் மானிய திட்டத்தை தொடங்கி வைக்க பிரதமர் மோடி தமிழகம் வருகை!


வேலைக்குச் செல்லும் மகளிர் பயனுறும் வகையில் இரு சக்கர வாகனம் வாங்கிட, அரசுதரப்பில் ரூ.25 ஆயிரம் மானியம் வழங்கப்படும் என மறைந்த முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். இதனையடுத்து இதற்கான விண்ணப்பங்கள் மாநிலம் முழுவதும் விநியோகிக்கப்பட்டது. இதனையடுத்து மானிய விலை ஸ்கூட்டர் வாங்க விண்ணப்பிக்கவும், இரு சக்கர வாகனத்திற்கான ஓட்டுநர் உரிமம் பெறவும் பெண்கள் வட்டாரப்போக்குவரத்து அலுவலகங்களிலும் குவிந்தனர்.

அதன்படி ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24ம் தேதி ஸ்கூட்டர் மானிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. பிரதமர் மோடி இந்த விழாவில் கலந்து கொண்டு துவங்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே தற்போதைய அதிமுக அரசு பாரதிய ஜனதா கட்சியின் பினாமியாக செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, பிரதமர் மோடி கூறியதால் தான் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் இணைவதற்கு ஒப்புக் கொண்டதகா துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பகிரங்கமாக தெரிவித்தார்.

இந்நிலையில் அதிமுக-வின் ஸ்கூட்டர் மானிய திட்டத்தை, தொடங்கி வைக்க பிரதமர் மோடி தமிழகம் வருவதாக கூறியுள்ளது தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி