ஆப்நகரம்

"கட்டப்பஞ்சாயத்து செய்கிறார் மோடி": ஸ்டாலின் கடும் விமர்சனம்..!

அதிமுகவின் இரு பிரிவினரையும் இணைக்க பிரதமர் மோடி கட்டப்பஞ்சாயத்து செய்து வருகிறார் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.

TNN 25 May 2017, 3:20 pm
அதிமுகவின் இரு பிரிவினரையும் இணைக்க பிரதமர் மோடி கட்டப்பஞ்சாயத்து செய்து வருகிறார் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.
Samayam Tamil modi is holding katta panchayat after dividing aiadmk stalin says
"கட்டப்பஞ்சாயத்து செய்கிறார் மோடி": ஸ்டாலின் கடும் விமர்சனம்..!


சென்னை சோழிங்கநல்லூரில் கோவில் குளத்தை தூர்வாரும் பணியை பார்வையிட்ட அவர், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். ”ஆர்.கே நகரில் வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு பணம் அளிப்பதற்காக 89 கோடி ரூபாய் பட்டுவாடா செய்யப்பட்டதற்கான ஆவணங்களை வருமான வரித்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். அதில் சில ஆவணங்களில் தமிழக முதல்வரின் பெயரும் இடம்பெற்றுள்ளது. இவையெல்லாம் நடந்த பிறகும் தமிழக முதல்வரை பிரதமர் சந்தித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்திக்கவும் பிரதமர் தயாராக இருக்கிறார். ஆனால் வறட்சியினால் கடும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ள தமிழக விவசாயிகளை சந்திக்க அவருக்கு நேரம் இல்லை. ” என மோடியை ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள பிரதமருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது குறித்த கேள்விக்கு பதிலளித்த ஸ்டாலின்,” தமிழக முதல்வர் மற்றும் ஓ.பி.எஸ் இருவருமே பிரதமருக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இருவரில் யாருக்கு அவர் நேரம் ஒதுக்குகிறார் என்பதை அறிந்த பின்னரே, இது குறித்து கருத்து தெரிவிக்க முடியும்.

நாங்கள் கோவில் குளங்களை தூர்வாரி வருவதை தமிழக அமைச்சர்களும், ஆளுங்கட்சியும் விமர்சனம் செய்கின்றனர். ஆனால் ஆளுங்கட்சியாக இருக்கும் அவர்கள் இதற்காக எந்த முயற்சியும் எடுக்கவில்லை. எங்களை விமர்சனம் செய்வதை விட்டுவிட்டு, மக்களுக்கு உதவக் கூடிய இது போன்ற பணிகளை தமிழக அரசு செய்ய முன்வர வேண்டும்.” என தெரிவித்தார்.

Modi is holding ‘katta panchayat’ after dividing AIADMK, Stalin says

அடுத்த செய்தி