ஆப்நகரம்

விடுதிக்கு திரும்பிய தலைவர்கள்: சகஜ நிலைமைக்கு திரும்பும் சென்னை சாலைகள்!

சீன அதிபர் ஷி ஜின்பிங், இந்திய பிரதமர் மோடி ஆகியோரின் மாமல்லபுர சந்திப்பு நிறைவடைந்து இருவரும் தங்கும் விடுதிக்குச் சென்றனர். இதனால் போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பிவருகிறது.

Samayam Tamil 11 Oct 2019, 10:33 pm
இந்தியா, சீனாவுக்கு இடையிலான இரண்டாவது முறைசாரா மாநாடு தமிழ்நாட்டில் மாமல்லபுரத்தில் நடைபெற்றுவருகிறது. இன்று மாலை பிரதமர் மோடி தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டையில் வலம் வந்தார். சீன அதிபர் ஷி ஜின்பிங்கை வரவேற்ற அவர் பல்லவர் கால சிற்பங்களை சீன அதிபருக்கு விளக்கினார். பின்னர் இரு நாட்டு தலைவர்களும் இளநீர் குடித்தபடி உரையாடினர்.
Samayam Tamil Untitled collage (14)


அதன்பின் பரதநாட்டியம், கதகளி உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இரு தலைவர்களும் ரசித்து நிகழ்ச்சியைப் பார்த்ததோடு கலைஞர்களுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டனர். உணவு ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் இரு தலைவர்களும் நீண்ட நேரம் தனியாக உரையாடினர். தமிழ்நாடு, கேரள உணவு வகைகள் பரிமாறப்பட்டன.

தலைவர்களின் பாதுகாப்பு காரணமாக சென்னையில் பல இடங்களில் போக்குவரத்து ஆங்காங்கே தடுத்து நிறுத்தப்பட்டது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினர். பல நிறுனவங்களில் ஊழியர்கள் அலுவலகத்துக்கு உள்ளேயேவைத்து பூட்டிவைக்கப்பட்டனர்.

நிகழ்ச்சி நிரலின் படி 9 மணிக்கு சீன அதிபர் ஷி ஜின்பிங் கிண்டி கிரேண்ட் சோழா ஓட்டலுக்கு திரும்பியிருக்க வேண்டும். ஆனால் இரு நாட்டு தலைவர்களும் உணவருந்தியபடி தொடர்ந்து உரையாடியநிலையில் தாமதமானது. இந்நிலையில் போக்குவரத்தை சரிசெய்வதற்காகவே தாமதம் ஆனதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பின்னர் ஷி ஜின்பிங்கை கிண்டிக்கு வழியனுப்பி வைத்தார் மோடி. பின்னர் மோடி கோவளத்தில் உள்ள தாஜ் பிஷர்மேன் கோவ் விடுதிக்கு கிளம்பிச் சென்றார். இரு தலைவர்களும் தங்கும் விடுதிகளுக்குச் சென்றபின்னரே போக்குவரத்து சகஜ நிலைக்கு திரும்பி வருகிறது.

அடுத்த செய்தி