ஆப்நகரம்

கொரோனா: தமிழகத்தில் சமூக பரவலா..? சென்னையில் மட்டும் 768 ... இளம்பெண் பலி...

தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் சென்னையில் 94 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Samayam Tamil 29 Apr 2020, 7:22 pm
தமிழகத்தில் அன்றாடம் கொரோனா நிலவரத்தை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. இன்று வெளியாகியுள்ள தகவலில், இன்று மேலும் 104 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2162 ஆக உயர்ந்துள்ளது.
Samayam Tamil தமிழகத்தில் 104 பேருக்கு கொரோனா


இன்று மேலும் 82 பேர் கொரோனா சிகிச்சையிலிருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை தமிழகத்தில் 1210 பேர் குணமாகியியுள்ளனர். இன்று 2 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் ஒருவருக்கு 65 வயது. மற்றொருவர் 27 வயதான பெண். அப்பெண் கடந்த 27ம் தேதி மருத்துவமனையில் உயிரிழந்த நிலையில் இன்றுதான் அவருக்கு கொரோனா பாதிப்பு இருந்துள்ளது தெரிந்துள்ளது.


அதிகபட்சமாக இன்று சென்னையில் மேலும் 94 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. நேற்று 103 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து இன்று மேலும் இந்த எண்ணிக்கை அதிர்ச்சி அளித்துள்ளது. சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை இன்றைய எண்ணிக்கையோடு 768 ஆக அதிகரித்துள்ளது.

கிருஷ்ணகிரியையும் விட்டுவைக்காத கொரோனா..! மருத்துவருக்கு தொற்று உறுதி....

சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 6 மண்டலங்களில் அதிகமாக உள்ளதாக அரசு இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த குறிப்பிட்ட மண்டலங்கள் இனி தீவிரமாக கண்காணிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி