ஆப்நகரம்

500 கிலோ கடல் அட்டை, 50 கிலோ கஞ்சா பறிமுதல்; ஏர்வாடி, தனுஷ்கோடியில் அதிர்ச்சி!

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த தடை செய்யப்பட்ட கடல் அட்டை, கஞ்சா ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Samayam Tamil 12 Mar 2019, 2:15 pm
தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் இருந்து, இலங்கைக்கு சட்டவிரோத கடத்தல் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இதனைத் தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Samayam Tamil Cannabis


கடந்த ஓராண்டில் மட்டும் திருச்சி மண்டலத்தில் கடத்தல் சம்பவங்களில் இருந்து, ரூ.21 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் கடத்தல் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த சூழலில் இன்று அதிகாலை ஏர்வாடி அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது டாடா சுமோ வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 500 கிலோ கடல் அட்டை பிடிபட்டது. இதுதொடர்பாக தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் பகுதியைச் சேர்ந்த சம்சுதீன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதையடுத்து கடல் அட்டைகளை தேவிபட்டினம் கடலோரப் பாதுகாப்பு குழுமக் காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்று, விசாரித்து வருகின்றனர். இதேபோல் தனுஷ்கோடி வடக்கு கடற்கரையில் 50 கிலோ கஞ்சாவை போலீசார் கைப்பற்றினர்.

இவை இலங்கைக்கு கடத்தப்பட திட்டமிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த கஞ்சா 23 பார்சல்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது.

அடுத்த செய்தி