ஆப்நகரம்

விண்ணப்பித்து பல மாதங்கள் ஆகியும், ’அம்மா’ ஸ்கூட்டர் மானியத்திற்காக காத்திருக்கும் 8,118 பெண்கள்!

அம்மா ஸ்கூட்டர் மானியத்திற்காக 8,000க்கும் மேற்பட்ட மகளிர் பல மாதங்களாக காத்திருக்கின்றனர்.

Samayam Tamil 21 May 2018, 1:32 pm
சென்னை: அம்மா ஸ்கூட்டர் மானியத்திற்காக 8,000க்கும் மேற்பட்ட மகளிர் பல மாதங்களாக காத்திருக்கின்றனர்.
Samayam Tamil Amma Scooter


கடந்த 2016ல் நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தில், பணியிடங்களுக்கு செல்லும் பெண்களுக்கு உதவியாக இருசக்கர வாகனங்கள் வாங்க 50% மானியம் வழங்கப்படும் என்று அதிமுக தெரிவித்தது.

இந்த திட்டம் ஜெயலலிதா மறைவிற்கு பின், முதலமைச்சர் பழனிச்சாமியால் 2017, பிப்ரவரி 24ல் தொடங்கி வைக்கப்பட்டது. அதன்படி, ஆண்டுக்கு ஒரு லட்சம் உழைக்கும் மகளிருக்கு, இருசக்கர வாகனம் வாங்க, 50 சதவீதம் மானியம் அல்லது, ரூ.25,000 வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

சென்னை மாநகராட்சியில் 9,518 பேருக்கு மானியம் வழங்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் தொடக்க விழாவின் போது 1,400 பேருக்கு மட்டுமே ஸ்கூட்டர் மானியம் வழங்கப்பட்டது. இந்நிலையில் 8,118 பேர் மானியம் கிடைக்காமல், பல மாதங்களாக காத்திருக்கின்றனர்.

இதற்கு ஆளுங்கட்சியின் தலையீடு காரணம் என்று கூறப்படுகிறது. அதேசமயம் மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடந்து வருகிறது. பெரும்பாலானோர் ஓட்டுநர் உரிமம் அளிக்கவில்லை.

ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு, விரைவில் மானியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இந்நிலையில் நடப்பாண்டில் எத்தனை பேருக்கு மானியம், புதிய விண்ணப்பங்கள் குறித்து எந்தவித தகவலும் வெளிவரவில்லை.

More than 8,000 women are waiting for Amma Scooter subsidy.

அடுத்த செய்தி