ஆப்நகரம்

மாணவர்களுக்கு விடுமுறை.. இப்போது மலை ரயிலும் ரத்து.. மோசமாகும் நீலகிரி நிலை

ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதையடுத்து நீலகிரி மாவட்டத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மலை ரயில் சேவையும் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

Samayam Tamil 21 Oct 2019, 10:35 pm
ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதையடுத்து நீலகிரி மாவட்டத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மலை ரயில் சேவையும் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
Samayam Tamil mountain rail service stopped due to red alert
மாணவர்களுக்கு விடுமுறை.. இப்போது மலை ரயிலும் ரத்து.. மோசமாகும் நீலகிரி நிலை

கடந்த சில நாட்களாக நீலகிரி கோவை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் நாளை ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்திருந்தது. வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின் படி நாளை பலத்த மழை எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை தினம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, விடுமுறை அறிவிப்போடு நிற்காமல், அடுத்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

அதாவது அக்டோபர் 22,23 மற்றும் 24 ஆகிய 3 நாட்களில் மேட்டுப்பாளையம் - உதகை மார்க்கமாக இயக்கப்பட்டு வந்த மலை ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியர் இன்னசெண்ட் திவ்யா தலைமையில் ரெட் அலெர்ட் முன்னேற்பாடு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முழுவீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி