ஆப்நகரம்

தீக்குழி இறங்கினர் மொகரம் அனுசரித்த இஸ்லாமியர்கள்

தீக்குழி அமைத்து அதில் இறங்கி மொகரம் தினத்தின் போது இஸ்லாமியர்கள் துக்க நாளாக அனுசரித்து வருகின்றனர்.

TNN 12 Oct 2016, 7:02 pm
வேலூர் : தீக்குழி அமைத்து அதில் இறங்கி மொகரம் தினத்தின் போது இஸ்லாமியர்கள் துக்க நாளாக அனுசரித்து வருகின்றனர்.
Samayam Tamil mourning of muharram in tamil nadu
தீக்குழி இறங்கினர் மொகரம் அனுசரித்த இஸ்லாமியர்கள்


நபிகளின் பேரன் இமாம் உசேன் கொல்லப்பட்ட தினத்தை, துக்க நாளாக இஸ்லாமியர்கள் மொகரம் தினத்தை அனுசரித்து வருகின்றனர். வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே இஸ்லாமியர்களின் துக்க நாளாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் மொகரம் தினத்தை, அனுசரிக்கும் விதமாக தீமிதித்து தங்கள் துக்கத்தை வெளிப்படுத்தினர்.

தியாகத்தை நினைவு கூறும் விதமாக, கறுப்பு உடை அணிந்து, 10 நாட்களாக உண்ணா நோன்பு இருந்து வருகின்றனர் இஸ்லாமியர்கள். சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே மொகரம் தினத்தை ஒட்டி, இந்துக்கள் தீய்க்குழியில் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

முதுவன் திடலில் உள்ள பாத்திமா பள்ளிவாசலுக்கு முன் பள்ளம் தோண்டி தீமூட்டினர். விரதம் இருந்த பகதர்கள் அந்த் தீக்குழியில் இறங்கினர். பெண்கள் முக்காடிட்டபடி தலைமீது தீகங்குகளை வைத்துக்கொண்டு நேர்த்திக் கடன் செலுத்தினர்.

அடுத்த செய்தி