ஆப்நகரம்

தமிழகத்தில் 3501 நகரும் ரேஷன் கடைகள்: செப்.,21ஆம் தேதி தொடக்கம்!

தமிழகத்தில் 3501 நகரும் ரேஷன் கடைகளை வருகிற 21ஆம் தேதி முதல்வர் பழனிசாமி தொடங்கி வைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Samayam Tamil 18 Sep 2020, 10:19 pm
கடந்த மார்ச் மாதம் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் சில அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் பழனிசாமி, “மக்களின் குடியிருப்புகளுக்கு அருகிலேயே அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்கும் பொருட்டு 3,501 நகரும் நியாய விலைக்கடைகள் ரூ.9.66 கோடி மதிப்பில் துவக்கப்படும்” என்றார்.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இரண்டாம் நாள் கூட்டத்தில் ரேஷன் கடைகள் தொடர்பான கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு, சட்டமன்ற விதி 110ன் கீழ் குடியிருப்புகளுக்கு அருகிலேயே அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்கும் பொருட்டு, மாநிலம் முழுவதும் ரூ.9.66 கோடி மதிப்பீட்டில் 3,501 அம்மா நகரும் நியாயவிலை கடைகளை துவக்க உத்தரவிட்டார். இந்த நகரும் நியாயவிலைக் கடைகள் விரைவில் துவங்கப்பட உள்ளது.

மேலும், நியாயவிலை கடைகளுக்கு அருகிலேயே அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் அம்மா சிறு கூட்டுறவு சிறப்பு அங்காடிகள் திறக்கப்பட உள்ளன என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

கொரோனா 2ஆம் அலை வரப்போகுது: பீதியை கிளப்பும் எச்சரிக்கை!

அதன் தொடர்ச்சியாக, தமிழகத்தில் 3501 நகரும் ரேஷன் கடைகளை வருகிற 21ஆம் தேதி முதல்வர் பழனிசாமி தொடங்கி வைக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அத்தியாவசிப் பொருள்கள் சரியான எடையில் தரமான உணவுப் பொருள்கள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்படி வாகனங்கள் மூலம் குடியிருப்பு பகுதிகளுக்கே சென்று அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி