ஆப்நகரம்

கைது செய்யப்பட்ட எம்.பி.வசந்தகுமார் ஜாமினில் விடுவிப்பு

தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் எச்.வசந்தகுமார் நாங்குநேரியில் கைது செய்யப்பட்டிருந்தார்.

Samayam Tamil 21 Oct 2019, 6:15 pm
நாங்குநேரி: தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக கைது செய்யப்பட்ட மக்களவை உறுப்பினர் வசந்தகுமார் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
Samayam Tamil vasantha  kumar


தமிழகத்தின் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இன்று இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.

விறு விறு வாக்குப்பதிவு: வேகம் குறையாத பணபட்டுவாடா!

இதனிடையே, நாங்குநேரி கலங்குடி என்ற இடத்தில் அனுமதியின்றி நுழைந்ததாக கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் எச்.வசந்தகுமார் உள்ளிட்ட நான்கு பேரை போலீசார் கைது செய்து காவல்நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். தேர்தல் அதிகாரி ஜான் கேப்ரியல் கொடுத்த புகாரின் அடிப்படையில், அவர்கள் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நாங்குநேரியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் கடந்த சனிக்கிழமை மாலை 6 மணிக்கு மேல் தொகுதியைச் சாராதவர்கள் வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், வசந்தகுமார் அங்கு சென்றதால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

நாங்குநேரியில் எம்.பி. வசந்தகுமார் கைது!

பாளையங்கோட்டையிலிருந்து கன்னியாகுமரிக்கு செல்லும் வழியில் தனது தொகுதியை பார்க்க வந்ததாக வசந்தகுமார் தரப்பில் கூறப்பட்டது. அத்துடன், வசந்தகுமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விக்கிரவாண்டியில் தொடரும் வாக்குப்பதிவு இயந்திர கோளாறு!

இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக கைது செய்யப்பட்ட மக்களவை உறுப்பினர் வசந்தகுமார், இருநபர் ஜாமினில் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார். முன்னதாக, என்னால் நாங்குநேரியில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றுவிடும் என்ற அச்சத்திலேயே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒரு கைதியை அழைத்து வருவது போல என்னை காவல் நிலையத்துக்கு போலீசார் அழைத்து சென்றனர் என வசந்தகுமார் குற்றம் சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி