ஆப்நகரம்

சி.பி.சி.ஐ.டி விசாரணையில் எங்களுக்கு திருப்தி இல்லை: முகிலன் மனைவி

சி.பி.சி.ஐ.டி விசாரணையில் தங்களுக்கு திருப்தி இல்லை என முகிலனின் மனைவி கூறியுள்ளார்.

Samayam Tamil 18 Mar 2019, 4:22 pm
சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் மாயமாகி, ஒரு மாதங்களுக்கு மேலான நிலையில், சி.பி.சி.ஐ.டி விசாரணையில் தங்களுக்கு திருப்தி இல்லை என முகிலனின் மனைவி கூறியுள்ளார்.
Samayam Tamil சி.பி.சி.ஐ.டி விசாரணையில் எங்களுக்கு திருப்தி இல்லை: முகிலன் மனைவி
சி.பி.சி.ஐ.டி விசாரணையில் எங்களுக்கு திருப்தி இல்லை: முகிலன் மனைவி


ஈரோடு மாவட்டம், சென்னிமலை பகுதியைச் சேர்ந்தவர் முகிலன் (52). சூழலியல் செயல்பாட்டாளரான இவர், தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளராக உள்ளார்.

முகிலன் கடந்த பிப்ரவரி 15ம் தேதி சென்னையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து ஸ்டெர்லைட்டு துப்பாக்கிச் சூடு குறித்த, பரபரப்பு தகவலை வெளியிட்டார். இந்த ஆதாரங்களை வெளியிடுவதால், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் கூறினார்.

இதனை தொடர்ந்து, அன்றிரவு மதுரை செல்வதற்காக எழும்பூர் ரயில் நிலையத்துக்குச் சென்ற முகிலனை தற்போது வரை காணவில்லை. இதுதொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

இதனிடையே முகிலனை கண்டுபிடித்துத் தரக் கோரி, அவரது மனைவி பூங்கொடி மற்றும் சமூக ஆர்வலர்கள் முகிலனைத் தேடி' என்ற ரயில் பரப்புரைப் பயணத்தை மேற்கொண்டனர். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய பூங்கொடி கூறுகையில், என் கணவர் முகிலன் காணாமல் போன வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் விசாரணையில் எங்களுக்கு திருப்தி இல்லை. நீதிமன்றத்தைதான் நாங்கள் முழுமையாக நம்பி உள்ளோம் என்று கூறினார்.

அடுத்த செய்தி