ஆப்நகரம்

கனமழை எதிரொலி-ரயில்சேவை பாதிப்பு

மும்பையில் பெய்து வரும் கனமழை காரணமாக அங்கு செல்ல இருந்த ரயில்சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

TNN 30 Aug 2017, 4:18 pm
மும்பையில் பெய்து வரும் கனமழை காரணமாக அங்கு செல்ல இருந்த ரயில்சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
Samayam Tamil mumbai trains are cancelled today
கனமழை எதிரொலி-ரயில்சேவை பாதிப்பு


மும்பை நகரத்தில் 12 ஆண்டுகளுக்கு பிறகு ஏற்பட்ட கட்டுக்கடங்காத மழையாலும், வெள்ளத்தாலும் நகரம் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கி போக்குவரத்து சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மும்பை செல்ல இருந்த ரயிலின் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அவற்றின் விவரம் வருமாறு
இன்று காலை 11 மணிக்கு சென்னை செண்ட்ரலில் இருந்து செல்ல வேண்டிய, மும்பை CSTM விரைவு ரயில்(Train No.11042) மற்றும் கோயம்புத்தூரில் இருந்து 8.55 மணிக்கு புறப்படும் லோக்மானியா திலக் டெர்மினஸ் விரைவு ரயில்(Train No.11014) ஏற்கெனவே ரத்து செய்யப்படு விட்டன.

இன்று இரவு 11.55 மணிக்கு கோயம்புத்தூரில் இருந்து செல்லக்கூடிய லோக்மானியா திலக்(Train No.11013) ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே நிர்வாகம் அறிவிதுள்ளது.

Mumbai trains are cancelled today

அடுத்த செய்தி