ஆப்நகரம்

நம்பிக்கை தரும் செய்தி... சாத்தான்குளம் விவகாரத்தில் கொலை வழக்குப் பதிவு

சாத்தான்குளம் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட 6 பேர் மீது சிபிசிஐடி கொலை வழக்குப் பதிவு செய்துள்ளது.

Samayam Tamil 1 Jul 2020, 11:02 pm
சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை மகன் உயிரிழந்த விவகாரத்தை கொலை வழக்காகப் பதிவு செய்து சிபிசிஐடி அறிவித்துள்ளது.
Samayam Tamil ஜெயராஜ் பென்னிக்ஸ்


தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் விசாரணைக்காக அழைக்கப்பட்டு, காவலர்களால் சித்ரவதை செய்யப்பட்டு தந்தை மகன் இருவரும் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியது. இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்கள் மற்றும் போராட்டக்காரர்களின் முதன்மையான கோரிக்கையாக இருந்தது.

ஆனால், கொலை வழக்குப் பதிவு செய்யமால் ஏறக்குறைய 12 நாட்களாக இழுத்தடிக்கப்பட்டு வந்த நிலையில், வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. அதன்பிறகு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டு இரவோடு இரவாக விசாரணை தொடங்கியது.

இந்நிலையில், இந்த வழக்கில் தற்போது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்தக் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரகு கணேஷ் முதல்கட்டமாக கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சிபிசிஐடி போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

சிபிசிஐடிபோலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் 6 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. மீதமுள்ளவர்களை கைது செய்ய 12 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் சிபிசிஐடி தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

எஸ்.ஐ. ரகுகணேஷின் கைதுக்கு பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்ததோடு, சில பகுதிகளில் பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி