ஆப்நகரம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின்: முத்தரசன் தகவல்!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்ளவுள்ளதாக முத்தரசன் கூறியுள்ளார்.

Samayam Tamil 1 Aug 2022, 11:00 am
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு திருப்பூரில் ஆகஸ்ட் 6ஆம் தேதி தொடங்குகிறது. இந்த மாநாட்டில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்க உள்ளதாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறினார்.
Samayam Tamil mk stalin mutharasan


இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்ட 24ஆவது மாநாடு சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், துணைச் செயலாளர் மு.வீரபாண்டியன், தென்சென்னை மாவட்டச் செயலாளர் எஸ்.ஏழுமலை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முத்தரசன், “தமிழ்நாடு முழுவதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட மாநாடுகள் நடைபெற்று வருகின்றன.
மீண்டும் இணையும் அதிமுக: நேரம் குறித்த சசிகலா - பண்ருட்டியுடன் என்ன பேசினார்?
கட்சியின் மாநில மாநாடு வரும் ஆகஸ்ட் 6 முதல் 9ஆம் தேதி வரை திருப்பூரில் நடைபெற உள்ளது. 6ஆம் தேதி மாலை நடைபெறும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். கூட்டணி கட்சித் தலைவர்களும் இதில் கலந்துகொள்ள உள்ளனர்.
தொடரும் தேர் விபத்துக்கள்: ஸ்டாலின் அரசை குற்றம் சாட்டும் அண்ணாமலைகேரளாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி கொள்கைக் கூட்டணி என்றும், இக்கூட்டணி தொடரும் என்றும் தெரிவித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

பிரதமர் மோடி பங்கேற்ற அண்ணா பல்கலை. பட்டமளிப்பு விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், பழமைவாதத்தை போக்கவேண்டும். மாணவர்கள் பகுத்தறிவுடன் செயல்பட வேண்டும் என்று கூறியிருப்பது வரவேற்கத்தக்கது” என்று முத்தரசன் கூறினார்.

அடுத்த செய்தி