ஆப்நகரம்

ஐபிஎல் எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்ற தமிழ் நடிகர் திடீர் கைது!

ஐபிஎல் போராட்டத்தில் பங்கேற்ற நடிகரும், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவருமான சிவராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.

Samayam Tamil 9 Jun 2018, 3:21 pm
சென்னை: ஐபிஎல் போராட்டத்தில் பங்கேற்ற நடிகரும், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவருமான சிவராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.
Samayam Tamil IPL Protest
ஐபிஎல் எதிர்ப்பு போராட்டம்


கடந்த ஏப்ரல் - மே மாதங்களில் 11வது ஐபிஎல் தொடர் நடைபெற்றது. அதில் 2 ஆண்டுகள் தடைக்கு பின்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பங்கேற்றது. இதன் போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தன.

ஆனால் தமிழகம் முழுவதும் காவிரி பிரச்சனை தீவிரமடைந்திருந்த நிலையில், சென்னையில் ஐபிஎல் நடத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் சென்னை அணியின் முதல் போட்டி நடைபெற்ற போது, பல்வேறு அமைப்பினரும் மைதானத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களை தடுத்து, காவல்துறையினர் கைது செய்தனர். அப்போது சீருடையில் இருந்த காவலர்களை நாம் தமிழர் கட்சியினர் தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் சிலர் நிபந்தனை ஜாமினில் விடுதலை ஆகினர்.

இந்த சூழலில் ஐபிஎல் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கோலிவுட் நடிகர் ஒருவர், அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அவர் நடிகர் சிவராஜ் என்றும், நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி என்றும் தெரியவந்துள்ளது.

Naam Tamilar Katchi member sivaraj arrested.

அடுத்த செய்தி