ஆப்நகரம்

எனது மகன்கள் ஆங்கில வழிக் கல்வியில் படிக்கிறார்கள்.. இதுதான் காரணம்? - சீமான் பொளேர் பதில்!

விருதுநகர் நாதக வேட்பாளருக்கு தமிழ் வாசிக்கத் தெரியாதது தொடர்பாக சீமான் விளக்கம் அளித்துள்ளார்.

Authored byஎழிலரசன்.டி | Samayam Tamil 27 Mar 2024, 10:24 pm
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருக்கும் 40 மக்களவைத் தொகுதிகளுக்கு வரும் ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலில் திமுக, அதிமுக மற்றும் பாஜக ஆகியவை கூட்டணி அமைத்து களம் காண்கின்றன. எனினும் வழக்கம் போல சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி 40 தொகுதிகளிலும் தனித்து களமிறங்கியுள்ளது.
Samayam Tamil Seeman


தேர்தலில் 20 பெண் வேட்பாளர்களும், 20 ஆண் வேட்பாளர்களும் களமிறங்கியுள்ளனர். நாம் தமிழர் கட்சி கடந்த தேர்தல்களில் போட்டியிட்ட கரும்பு விவசாயி சின்னத்தை தாமதமாக மனு அளித்ததை காரணம் காட்டி தேர்தல் ஆணையம் வழங்க மறுத்தது. அதற்கு எதிராக நடத்திய சட்டப் போராட்டங்களும் பலனளிக்கவில்லை. இதனையடுத்து, வரும் மக்களவைத் தேர்தலில் ஒலிவாங்கி (மைக்) சின்னத்தில் நாம் தமிழர் கட்சி போட்டியிடுகிறது.

அண்ணாமலைக்கு எதிராக இறங்கி அடித்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் - அதிமுக வேட்பாளருக்கு திடீர் சப்போர்ட் - என்ன விஷயம் தெரியுமா

கடந்த சில நாட்களாக நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர். விருதுநகர் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கவுசிக் பாண்டியன், வேட்பு மனுதாக்கலின் போது தேர்தல் உறுதிமொழியை தமிழில் வாசிக்க முடியாமல் தடுமாறினார். இதனையடுத்து, தேர்தல் அதிகாரி உறுதிமொழியை வாசிக்க, அதனை அப்படியே பின் தொடர்ந்து வாசித்து உறுதிமொழி ஏற்றார். தமிழ், தமிழருக்காக கட்சி நடத்தும் சீமான் கட்சி வேட்பாளருக்கே தமிழ் தெரியவில்லையா என சமூக வலைதளங்களில் விவாதப் பொருளானது.
இதுதொடர்பாக விளக்கம் அளித்த நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “விருதுநகர் வேட்பாளர் கவுசிக் பாண்டியன் தமிழ் படிக்க திணறிவிட்டான் என்று சொல்கிறார்கள். ஓமனில் படித்ததால் அவருக்கு தமிழ் வாசிக்க வரவில்லை. அவரை தமிழ் படிக்கத் தெரியாதவராக வளர்த்த அரசு தான் கவலைப்பட வேண்டும். என் பிள்ளைக்கு தமிழ் தெரியவில்லை என்பது எனக்கு அவமானமில்லை. வீழ்வது நாமாகினும், வாழ்வதும் தமிழாக இருக்கட்டும் என்ற வெற்று முழக்கத்தை வைத்து எங்களை வீழ வைத்தவர்கள் தான் அவமானப்பட வேண்டும்.

திருமாவளவனுக்கு ஷாக் தந்த தேர்தல் ஆணையம்... விசிகவுக்கு பானை சின்னம் கிடையாது - அடுத்து என்ன?

என் மகன்கள் கூட இருவரும் ஆங்கில வழிக் கல்வியில் தான் படிக்கிறார்கள். அதற்கு நான் அவமானப்படுகிறேன். என் பிள்ளைகள் தமிழ் படிக்க தமிழ்நாட்டில் பள்ளிகள் இல்லை. நாங்கள்தான் வீட்டில் பேசிப் பேசி அவர்களுக்கு தமிழ் சொல்லிக் கொடுக்கிறோம். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆங்கிலம் ஒரு மொழிப் பாடமாக மட்டும் இருக்கும்” என்றும் ஆவேசமாக கருத்து தெரிவித்தார்.
எழுத்தாளர் பற்றி
எழிலரசன்.டி
நான் எழிலரசன். கடந்த 8 ஆண்டுகளாக டிஜிட்டல் ஊடகத் துறையில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சமூகம் சார்ந்த செய்திகள், கட்டுரைகள் பலவற்றை எழுதியுள்ளேன். தற்போது சமயம் தமிழ் இணையதளத்தில் Digital Content Producer - ஆக பணியாற்றி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி