ஆப்நகரம்

நாம் தமிழர் கட்சி மதன்குமார் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!

ஐபிஎல் பேராட்டத்தின் போது போலீசாரை தாக்கியதாக கைது செய்யப்பட்ட நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த மதன்குமார் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

Samayam Tamil 22 Jun 2018, 12:46 pm
ஐபிஎல் பேராட்டத்தின் போது போலீசாரை தாக்கியதாக கைது செய்யப்பட்ட நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த மதன்குமார் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
Samayam Tamil ipl attack


காவிரி போரட்டத்தை திசை திருப்பும் வகையில் ஐபிஎல் போட்டி நடைபெறுவதாக சென்னை சேப்பாக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 10ம் தேதி போராட்டம் நடைபெற்றது. நாம் தமிழர் கட்சி, தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அமைப்பினர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது ஏற்பட்ட மோதலில் கிரிக்கெட் ரசிகர்கள் மீதும், காவலர்கள் மீதும் போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தினர்.இதுதொடர்பான வீடியோவில் தாக்குதலில் ஈடுபடுவது, நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

இதையடுத்து, சீருடையில் இருக்கும் காவலர்கள் மீது தாக்குதல் நடத்துவதை தடுக்கும் வகையில் கடுமையான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டரில் கண்டனம் தெரிவித்தார். ரஜினியின் இந்த கருத்துக்கு அமைச்சர் ஜெயக்குமாரும் ஆதரவு தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியினர் மீது கொலை முயற்சி, கொலை மிரட்டல், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், ஆபாசமாக பேசியது என வழக்குகள் பதியப்பட்டது.

மேலும், ஐபிஎல் பேராட்டத்தின் போது சீருடையில் இருந்த காவலரை தாக்கியதாக நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த மதன்குமார் என்பவரை திருவல்லிக்கேணி போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில், மதன்குமார் மீது தற்போது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே, மதன்குமார் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், ஆள் கடத்தல், வழிப்பறி உள்ளிட்ட 6 வழக்குகளில் அவர் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அடுத்த செய்தி