ஆப்நகரம்

நீரில் மூழ்கிய பயிர்கள்! நாகை விவாசாயிகள் கவலை

வடகிழக்கு பருவ மழைால் நாகை மாவட்டத்தில் விவசாய பயிர்கள் எல்லாம் நீரில் முழ்கியதையடுத்து, விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

TNN 3 Nov 2017, 6:56 pm
வடகிழக்கு பருவ மழைால் நாகை மாவட்டத்தில் விவசாய பயிர்கள் எல்லாம் நீரில் முழ்கியதையடுத்து, விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
Samayam Tamil nagapattinam rain flood affect farmers
நீரில் மூழ்கிய பயிர்கள்! நாகை விவாசாயிகள் கவலை


தமிழகம் முழுவதும் கடந்த ஐந்து நாட்கள் பெய்த வடகிழக்கு பருவமழையால் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாகை மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் சாகுபடி செய்த பயிர்கள் எல்லாம், நீரில் மூழ்கியதால், விவசாயிகள் அனைவரும் கவலையடைந்துள்ளனர்.

நாகையில் உள்ள வாய்மேடு, தலைஞாயிறு, திட்டச்சேரி உள்ளிட்ட பகுதிகளில், சுமார் 2,000 ஹெக்டேர் பரப்பளவில் உள்ள பயிர்கள் முழுவதுமாக சேதடைந்துள்ளது.

மேலும், விளக்குமுகத் தெரரு, வள்ளுவர் தெரு, தாமரைக்குளத் தெரு ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. அந்த பகுதிகளில் உள்ள மக்கள், அருகேயுள்ள பள்ளிக்கூடங்களில் தங்க வைக்கப்பட்டு, உணவு வழங்கப்படுகிறது.

மழை நீர் பாதிப்பிற்கு தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று நாகை மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அடுத்த செய்தி