ஆப்நகரம்

ஜாகீர் நாயக் தீவிரவாதத்தை ஆதரிக்கவில்லை: தவ்ஹீத் ஜமாத்

இஸ்லாமிய மதபோதகர் ஜாகீர் நாயக், தீவிரவாதத்தை ஒருபோதும் ஆதரிக்கவில்லை என, இந்திய தவ்ஹீத் ஜமாத் தெரிவித்துள்ளது.

TNN 11 Jul 2016, 10:42 pm
இஸ்லாமிய மதபோதகர் ஜாகீர் நாயக், தீவிரவாதத்தை ஒருபோதும் ஆதரிக்கவில்லை என, இந்திய தவ்ஹீத் ஜமாத் தெரிவித்துள்ளது.
Samayam Tamil naiks speeches dont promote terrorism india thowheed jamaath
ஜாகீர் நாயக் தீவிரவாதத்தை ஆதரிக்கவில்லை: தவ்ஹீத் ஜமாத்


ஜாகீர் நாயக், இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிராக செயல்படுவதாகவும், அவரது செயல்பாடுகள் மீது மத்திய அரசு தீவிர விசாரணை மேற்கொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தேசிய அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தில், இந்திய தவ்ஹீத் ஜமாத் களம் இறங்கியுள்ளது.

இஸ்லாமிய மதபோதகரான ஜாகீர் நாயக் ஒருபோதும் பிரிவினைவாதம் மற்றும் தீவிரவாதச் செயல்பாடுகளுக்கு ஆதரவாகச் செயல்படவில்லை என்றும், அவரது பேச்சுகளை ஒருசாரார் திரித்து வெளியிடுகின்றனர் என்றும், சென்னையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் எஸ்.எம்.பக்கார் தெரிவித்தார்.

மத சுதந்திரத்தில் தலையீடு நடத்துவதை வன்மையாகக் கண்டிப்பதாகவும், குறிப்பாக, முஸ்லீம் மதத்தினரை குறிவைத்து மேற்கொள்ளப்படும் விஷமப் பிரசாரங்களை கண்டித்து, மாபெரும் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாகவும் பக்கார் குறிப்பிட்டார்.

அடுத்த செய்தி