ஆப்நகரம்

வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் இருந்து வெளியேறினார் நல்லகண்ணு

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அரசு குடியிருப்பு வாடகை வீட்டிலிருந்து கே.கே. நகர் பகுதிக்கு குடிமாறினார்.

Samayam Tamil 11 May 2019, 4:34 pm
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு வசித்த வந்த தி. நகர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு இடத்தில் புதிய கட்டடம் வருவதால், அங்கியிருந்த தனது வீட்டை காலிசெய்துவிட்டு கே.கே நகர் பகுதியில் குடியேறினார்.
Samayam Tamil தி.நகரிலிருந்து கே.கே. நகருக்கு குடிமாறினார் நல்லகண்ணு
தி.நகரிலிருந்து கே.கே. நகருக்கு குடிமாறினார் நல்லகண்ணு


சென்னை தியாகராய நகரிலுள்ள குடியிருப்பு பகுதியில் புதிய கட்டடம் கட்டப்படுகிறது. இதனால் அங்கு வசிப்பவர்கள் வேறு இடத்திற்கு மாற கேட்டுக்கொண்டு சென்னை மாநகராட்சி நோட்டீஸ் விடுத்தது.

இதனால் அப்பகுதிவாசிகள் பலர் வேறு பகுதிகளுக்கு குடிமாறி வருகின்றனர். வீடுகளை காலிசெய்ய அரசு உத்தரவிட்டதால் மற்றவர்களை போல நல்லகண்ணும் தி.நகர் அரசு குடியிருப்பில்
இருந்து வெளியேறினார்.

முன்னதாக, தி.நகர் குடியிருப்பு பகுதியில் அரசு அவருக்கு இலவசமாக வீட்டு வழங்கியபோதும், அங்கு வாடகை கொடுத்தே வசித்து வந்தார். சுமார் 12 ஆண்டுகள் நல்லகண்ணு அப்பகுதியில் வசித்து வந்த நிலையில், தற்போது புதிய இடத்திற்கு குடியேறியுள்ளார்.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் முத்தரசன், கக்கன் குடும்பத்திற்கு எம்.ஜி.ஆர் அளித்த வீட்டை காலி செய்ய அரசு நெருக்கடி தரக்கூடாது. முன்னாள் அமைச்சர் கக்கன் குடும்பத்தை தமிழக அரசு காக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், தமிழக அரசுக்கு தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ. நெடுமாறன் பேசும் போது, 94 வயதான தலைவரின் தொண்டு, தியாகத்தை எண்ணிப் பார்க்காமல் அரசு வெளியேற்றிருக்கக்கூடாது. நல்லகண்ணுவுக்கு வேறு இடத்தில் தமிழக அரசு வீடு வழங்க வேண்டும் என்று கூறினார்.

அடுத்த செய்தி