ஆப்நகரம்

அதிமுக.,வில் இருந்து மட்டுமல்ல; பொது வாழ்வில் இருந்தே விலகுகிறார் நாஞ்சில் சம்பத்?

அதிமுக.,வில் இருந்தும், பொது வாழ்வில் இருந்தும் விலக நாஞ்சில் சம்பத் தீர்மானித்துள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.

TOI Contributor 3 Jan 2017, 5:44 pm
அதிமுக.,வில் இருந்தும், பொது வாழ்வில் இருந்தும் விலக நாஞ்சில் சம்பத் தீர்மானித்துள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil nanjil sampath to quit admk soon
அதிமுக.,வில் இருந்து மட்டுமல்ல; பொது வாழ்வில் இருந்தே விலகுகிறார் நாஞ்சில் சம்பத்?


இதுதொடர்பாக, தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் இவ்வாறு தகவல் கூறப்பட்டுள்ளது. பெரிதும் மதித்துவந்த ஜெயலலிதா உயிரோடு இல்லாத சூழலில், அவர் வழிநடத்திய கட்சியில் நீடிக்க விரும்பவில்லை என்றும் நாஞ்சில் சம்பத் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

மேலும், ஜெயலலிதா தனக்கு வழங்கிய இன்னோவா காரை தனிப்பட்ட காரணங்களுக்காகப் பயன்படுத்தவில்லை என்றும், அதனை கட்சி சார்ந்த பணிகளுக்காகவே பயன்படுத்தி வந்தேன் என்றும் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.

‘’கடந்த 8 மாதங்களாக, பிரசாரம் ஏதும் இல்லை. கட்சி நிகழ்ச்சிகளும் இல்லை என்பதால், அந்த கார் எனது நண்பர் வீட்டிலேயே முடங்கியுள்ளது. எனவே, அதனை மீண்டும் கட்சிப் பணிக்கே திரும்ப ஒப்படைத்துவிட்டேன். இன்னோவா கார் சம்பத் என்ற ஏளனப் பேச்சை நான் விரும்பவில்லை. அதிமுக.,வில் இருந்தும், தேவைப்பட்டால் பொது வாழ்வில் இருந்தும்கூட விலக தீர்மானித்துவிட்டேன். ஒருவேளை திமுக.,வில் இருந்து அழைப்பு வந்தால் அதுபற்றி பரிசீலிப்பேன்,’’ எனவும் நாஞ்சில் சம்பத் குறிப்பிட்டுள்ளார்.

Nanjil Sampath to quit ADMK soon?

அடுத்த செய்தி