ஆப்நகரம்

சட்டப்பேரவை உறுப்பினராக பதவியேற்றார் நாராயணசாமி

நெல்லித்தோப்பு சட்டப்பேரவை உறுப்பினராக பதவியேற்ற முதல்வர் நாராயணசாமிக்கு பேரவை சபாநாயகர் வைத்தியலிங்கம் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

TNN 23 Nov 2016, 1:04 pm
புதுவை: நெல்லித்தோப்பு சட்டப்பேரவை உறுப்பினராக பதவியேற்ற முதல்வர் நாராயணசாமிக்கு பேரவை சபாநாயகர் வைத்தியலிங்கம் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
Samayam Tamil narayanasamy sworn in as mla
சட்டப்பேரவை உறுப்பினராக பதவியேற்றார் நாராயணசாமி


புதுவையில் நடைபெற்ற கடந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. தொடர்ந்து, அங்கு நிலவு வந்த இழுபறியையடுத்து, புதுவை சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சியின் தலைவராக முன்னாள் அமைச்சர் நாராயணசாமி தேர்வு செய்யப்பட்டார்.

அதன்பின்னர், புதுவை முதல்வராக அரியணையில் அமர்ந்த அவர், எம்.எல்.ஏ-வாக போட்டியிடுவதற்கு வசதியாக நெல்லித்தோப்பு தொகுதி எம்.எல்.ஏ. ஜான்குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த தொகுதிக்கு கடந்த 19-ம் தேதியறு இடைத்தேர்தல் நடைபெற்றது.

தொடர்ந்து, புதுவை நெல்லித்தோப்பு தொகுதியில் நடைபெற்ற by polls results 2016 இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று காலை நடைபெற்றது. அதில், தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஓம்சக்தி சேகரை விட சுமார் 11,500 வாக்குகள் அதிகம் பெற்று நாராயணசாமி வெற்றி பெற்றுள்ளார். நாராயணசாமி சுமார் 18709 வாக்குகளும், ஓம்சக்தி சேகர் சுமார் 7557 வாக்குகளும் பெற்றனர்.

இந்நிலையில், நெல்லித்தோப்பு தொகுதியில் வெற்றி பெற்றதையடுத்து, தனது முதல்வர் பதவியை தக்க வைத்துக் கொண்ட PondyCMNarayanasamy நாராயணசாமி, நெல்லித்தோப்பு சட்டப்பேரவை உறுப்பினராக இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு பேரவை சபாநாயகர் வைத்தியலிங்கம் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
Narayanasamy sworn in as MLA

அடுத்த செய்தி