ஆப்நகரம்

அப்போலோவில் சிகிச்சை பெறும் நடராஜன்?

கல்லீரல் பாதிப்பால் அப்போலோவில் சசிகலாவின் கணவர் நடராஜன் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

TOI Contributor 9 Mar 2017, 3:11 pm
கல்லீரல் பாதிப்பால் அப்போலோவில் சசிகலாவின் கணவர் நடராஜன் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
Samayam Tamil natarajan has beed admitted in the apollo hospital
அப்போலோவில் சிகிச்சை பெறும் நடராஜன்?


தமிழக அரசியலில் மறைமுகமாக காய்களை நடத்திவருவதாகக் கூறப்படும் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவின் கணவர் நடராஜன் உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை அப்போலோவில் சேர்க்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்டு அப்போலோவில் நடராஜன் சிகிச்சை பெற்றதாக செய்தி வெளியாகி இருந்தது. இதற்குப் பின்னர்தான், சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா சிறையில் அடைக்கப்பட்டார். பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா அடைக்கப்பட்ட நாளில் பெங்களூருக்கு நடராஜன் சென்று இருந்தார்.

இதற்கிடையே, அதிமுகவின் பிடி டிடிவி தினகரன் கையில் இருப்பது நடராஜனுக்கும், சசிகலாவின் சகோதரர் திவாகரனுக்கும் பிடிக்கவில்லை என்றும் ஆதலால்தான், பன்னீர் செல்வத்தை திரைமறையில் நடராஜன் நடத்துகிறார் என்றெல்லாம் கூறப்பட்டது.

இந்நிலையில், கல்லீரல் பாதிக்கப்பட்டு சென்னை அப்போலோவில் நடராஜன் சிகிச்சை பெற்று வருவதாக செய்தி வெளியாகியுள்ளது.
Natarajan has beed admitted in the Apollo hospital

அடுத்த செய்தி