ஆப்நகரம்

ஸ்மார்ட் கார்டில் தேசியக் கொடி, அதிகரிக்கும் குழப்பம்.!

பழனி அருகே ஆயக்குடியைச் சேர்ந்த தயால்சுல்தான் என்பவருக்கு வழங்கப்பட்ட ஸ்மார்ட் ரேஷன் கார்டில் தேசியகொடி புகைப்படம் அச்சிடப்பட்டு உள்ளது.

TNN 19 Sep 2017, 4:21 pm
பழனி அருகே ஆயக்குடியைச் சேர்ந்த தயால்சுல்தான் என்பவருக்கு வழங்கப்பட்ட ஸ்மார்ட் ரேஷன் கார்டில் தேசியகொடி புகைப்படம் அச்சிடப்பட்டு உள்ளது.
Samayam Tamil national flag in smart card
ஸ்மார்ட் கார்டில் தேசியக் கொடி, அதிகரிக்கும் குழப்பம்.!


தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் தற்போது ரேஷன் கார்டிற்கு பதிலாக ஸ்மார் கார்டுகள் நடைமுறைக்கு வந்துள்ளன. இதில் ஏராளமான ஸ்மார்ட் கார்டுகள் குளறுபடிகளுடன் ஏராளமான பிழைகள் இருப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.

கடந்த நாட்களுக்கு முன் தமிழக அரசால் வழங்கப்பட்ட ஸ்மார் ரேஷன் கார்டில், நடிகை காஜல் அகர்வால், செருப்பு மற்றும் விநாயகரின் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இன்று பழனி அருகே ஆயக்குடியைச் சேர்ந்த தயால்சுல்தான் என்பவருக்கு வழங்கப்பட்ட ஸ்மார்ட் ரேஷன் கார்டில் அவரின் புகைப்படம் இருக்க வேண்டிய இடத்தில் தேசியகொடி புகைப்படம் அச்சிடப்பட்டு உள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மொபைல் ஆப் மூலமாக ஸ்மார்ட் கார்டு விவரங்கள் மற்றும் புகைப்படங்கள் பதிவேற்றம் செய்யப்படுவதால் இதுபோன்ற பிழைகள் ஏற்படுவதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார்.

National flag in smart card.

அடுத்த செய்தி