ஆப்நகரம்

அனிதா தற்கொலை குறித்து தேசிய ஆதிதிராவிட நல ஆணையம் விசாரணை

அரியலூர் மாணவி அனிதா தற்கொலை குறித்து தேசிய ஆதிதிராவிட நல ஆணையத் துணைத் தலைவர் முருகன் விசாரணை நடத்தி வருகிறார்.

TNN 16 Sep 2017, 4:52 pm
அரியலூர்: அரியலூர் மாணவி அனிதா தற்கொலை குறித்து தேசிய ஆதிதிராவிட நல ஆணையத் துணைத் தலைவர் முருகன் விசாரணை நடத்தி வருகிறார்.
Samayam Tamil national sc welfare commission started its investigation on anithas suicide
அனிதா தற்கொலை குறித்து தேசிய ஆதிதிராவிட நல ஆணையம் விசாரணை


அரியலூரைச் சேர்ந்த மாணவி அனிதா, நீட் தேர்வினால் பிளஸ்2வில் நல்ல மதிப்பெண் எடுத்தும் மருத்துவ இடம் கிடைக்காததால் தற்கொலை செய்துகொண்டார். இதனையடுத்து, தமிழகம் முழுவதும் நீட் தேர்வை எதிர்த்து எதிர்க்கட்சிகளும், மாணவர் அமைப்புகளும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், அனிதாவின் மரணம் குறித்து, தேசிய ஆதிதிராவிட நல ஆணையத் துணைத் தலைவர் முருகன் தலைமையில், அவரது குடும்பத்தினரிடமும், ஊர்க்காரர்களிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.

National SC welfare commission started its investigation on Anitha’s Suicide.

அடுத்த செய்தி