ஆப்நகரம்

புது இலவச சைக்கிளில் பள்ளி சென்ற மாணவன் கார் மோதி உயிரிழப்பு!

ராணிப்பேட்டை மேம்பாலத்தில் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் பண்ணிரெண்டாம் வகுப்பு மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார்.

Samayam Tamil 12 Jan 2019, 1:08 pm
வேலூர் அருகே ராணிப்பேட்டை மேம்பாலத்தில் சைக்கிளில் பள்ளி சென்ற பன்னிரெண்டாம் வகுப்பு மாணவன், கார் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil car

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை பாரதியார் நகர் பகுதியை சேர்ந்த பழவியாபாரி ஜீவா. இவரது மகன் சாம்(16), ஆற்காடு அரசு நிதியுதவி பெறும் பள்ளியில் 12ம் வகுப்பு பயின்று வருகிறார். சாம் வழக்கமாக பேருந்து மூலமாக பள்ளிக்கு சென்று வந்த நிலையில் நேற்று, பள்ளியில் வழங்கப்பட்ட இலவச மிதிவண்டியின் மூலம் பள்ளிக்கு சென்றார்.அப்போது ஆற்காடு மேம்பாலம் வழியாக வாலாஜா நோக்கி சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த கார் சைக்கிளின் மீது அதிவேகமாக மோதியதில் சாம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சாம்-ன் பெற்றோர்கள் தங்கள் மகனை கைகளை தூக்கி கொண்டு கதறிய காட்சி காண்போரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
அவருடன் வந்த மற்றொரு மாணவனான சக்தி என்பவன் சிறு காயங்களுடன் வாலாஜாபேட்டை அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்து குறித்து இராணிப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆற்காடு-இராணிப்பேட்டை இணைப்பு பாலத்தின் நடுவே ஏற்பட்ட இந்த விபத்து காரணமாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

அடுத்த செய்தி