ஆப்நகரம்

ஆட்சியரை சந்திக்கும் நெடுவாசல் போராட்டக்குழு: களத்தில் இன்று முக்கிய முடிவு

முதலமைச்சரின் அறிவிப்பிற்கு பின், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து நெடுவாசல் போராட்டக்குழுவினர் இன்று முக்கிய முடிவு எடுக்க உள்ளனர்.

TNN 3 Mar 2017, 5:09 am
புதுக்கோட்டை: முதலமைச்சரின் அறிவிப்பிற்கு பின், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து நெடுவாசல் போராட்டக்குழுவினர் இன்று முக்கிய முடிவு எடுக்க உள்ளனர்.
Samayam Tamil neduvasal protesters makes important decision today
ஆட்சியரை சந்திக்கும் நெடுவாசல் போராட்டக்குழு: களத்தில் இன்று முக்கிய முடிவு


புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாபெரும் போராட்டம் நடைபெற்று வருகிறது. மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள், விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் களத்தில் குதித்துள்ளனர். இந்நிலையில் திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி அளிக்காது என்று போராட்டக்குழுவினரிடம் முதலமைச்சர் பழனிச்சாமி உறுதியளித்தார். இதனால் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

ஆனால் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்று நெடுவாசல் போராட்டக்குழுவினர் அறிவித்தனர். இந்நிலையில் போராட்டம் நடத்தும் மக்கள் இன்ரு முக்கிய முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். மேலும் இன்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரை சந்திக்க உள்ளதாக கூறியுள்ளனர். அதில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்க உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். ஹைட்ரோ கார்பன் திட்டம் கைவிடும் வரை போராட்டம் தொடரும் என்றும், மத்திய அரசு தரப்பில் இருந்து தங்களுக்கு உரிய விளக்கம் அளிக்கப்பட வேண்டும் என்றும் போராட்டக்குழுவினர் வலியுறுத்தினர்.

Neduvasal protesters makes important decision today.

அடுத்த செய்தி