ஆப்நகரம்

நீட் தேர்வு இலவச பயிற்சி: மாணவர்கள் விண்ணப்பிப்பது எப்படி?

அரசு மற்றும அரசு உதவிப்பெறும் பள்ளிகளை சேர்ந்த மாணவர்களுக்கு ஜூன 15 ஆம் தேதி முதல் நீட் தேர்வுக்கு இலவச பயிற்சி அளிகக்ப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

Samayam Tamil 28 May 2020, 8:51 pm
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் ஆண்டுதோறும் நீட் நுழைவுத் தேர்வுக்கான இலவச பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
Samayam Tamil neet  coaching


இந்த ஆண்டுக்கான நீட் பயிற்சி, ஜூன் 15 ஆம் தேதி தொடங்க உள்ளது. நியூபாக்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம், ஆன்லைனில் இப்பயிற்சி வகுப்புகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தினமும் 4 மணி நேரம் வகுப்பு, 4 மணி நேரம் என்ற வகையில் பயிற்சி அளிக்கப்படும். அரசின் இந்த இலவச பயிற்சியை பெற விரும்பும் மாணவர்கள், http://app.eboxcolleges.com/neetregister என்ற லிங்க் மூலம் விண்ணப்பிக்கலாம்.

நீட் தேர்வை ஒத்தி வைக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

இதில் மாணவர்களின் பெயர், பள்ளி முகவரி, மாவட்டம், மின்னஞ்சல் முகவரி, நீட் பதிவு எண் உள்ளிட்டவற்றை குறிப்பிட வேண்டும்.

இலவச பயிற்சி குறித்து, நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள அனைத்து மாணவர்களுக்கும் தகவல் தெரிவிக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

மே மாதம் நடைபெறுவதாக இருந்த NEET UG 2020 தேர்வு ஒத்தி வைப்பு!

மருத்துவப்படிப்புக்கான (எம்பிபிஎஸ்) தகுதி காண் நுழைவுத தேர்வாக கருதப்படும் நீட் தேர்வு, பொதுமுடக்கம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இத்தேர்வு வரும் ஜூலை 26 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி