ஆப்நகரம்

நீட் தேர்வில் மாணவர்கள் அலைக்கழிக்கப்பட்ட விவகாரம்: மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் !

நீட் தேர்வில் மாணவர்கள் அலைக்கழிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழக அரசு மற்றும் தேசிய மனித உரிமை ஆணையம் சிபிஎஸ்இ-க்கு எதிராக நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Samayam Tamil 7 May 2018, 6:52 pm
நீட் தேர்வில் மாணவர்கள் அலைக்கழிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாகதமிழக அரசு மற்றும் தேசிய மனித உரிமை ஆணையம் சிபிஎஸ்இ-க்கு எதிராக நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
Samayam Tamil 08VJNEETEXAM


2018 ஆம்ஆண்டின் மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு நேற்று நடைபெற்றது. இதில் திருநெல்வேலி, திருச்சி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களுக்கு கேரளா மற்றும் வெளிமாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டது.

தமிழகத்தில் தேர்வு மையங்கள் ஒதுக்க சென்னை உயர்நீதின்மன்றம் உத்தரவிட்டும், உச்ச நீதிமன்றம் அதை மறுத்து மாணவர்களுக்கு ஒதுக்கிய மையங்களில்தான் தேர்வு எழுத வேண்டும் என தீர்ப்பளித்தது. இதனால் 4 சதவீத மாணவர்கள் தேர்வு எழுத செல்லவில்லை. எர்ணாகுளத்தில் நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் மகாலிங்கத்தின் தந்தை மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் நீட் தேர்வுக்கு கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் நீட் தேர்வில் மாணவர்கள் அலைக்கழிக்கபட்ட விவகரம் தொடர்பாக தமிழக அரசு தாமாக முன்வந்து, சிபிஎஸ்இ-க்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த நோட்டீஸில்நீட் தேர்வில் தமிழகத்தை சேர்ந்த3, 587 மாணவர்கள் கலந்துகொண்டதாகவும் அவர்களை சோதனை என்ற பெயரில் மனித உரிமை மீறல் நடத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் ஊடகங்களில் வெளியான தகவலை அடிப்படையாக வைத்து இந்த நோட்டீஸை மனித உரிமை ஆணையம் அனுப்பியுள்ளது. மேலும் தேர்வு மையங்கள் ஏன் வெளி மாநிலங்களில் அமைக்கப்பட்டது என்பதற்கு சிபிஎஸ்இ முறையான விளக்கம் அளிக்க வேண்டும் என்றுமனித உரிமை ஆணையத்தின் நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது. மேலும் நீட் தேர்வுக்கு மாணவனை அழைத்து சென்ற தந்தைமாரடைப்பால் மரணமடைந்தது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று தேசிய மனித உரிமைஆணையம் தெரிவித்துள்ளது.

தேசிய மனித உரிமை ஆணையம் தாமாகவே முன்வந்து இந்த விவகாரத்தை எடுத்துக் கொண்ட சம்பவம் , நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் மனநிறைவை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி