ஆப்நகரம்

அரசுப் பள்ளியில் படித்த மாணவனுக்கு மட்டும் மருத்துவ இடம்!

அரசுப் பள்ளியில் படித்த ஒரேயொரு மாணவனுக்கு மட்டும் மருத்துவ இடம் கிடைத்துள்ளது.

Samayam Tamil 7 Jul 2018, 4:21 pm
அரசுப் பள்ளியில் படித்த ஒரேயொரு மாணவனுக்கு மட்டும் மருத்துவ இடம் கிடைத்துள்ளது.
Samayam Tamil neet


மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே மாதம் 6ம் தேதி நடந்தது. இதில், தமிழகத்தில் இருந்து கிட்டத்தட்ட ஒரு லட்சத்திற்கும் அதிகமான மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர். இதையடுத்து கடந்த மாதம் 4ம் தேதி இதற்கான முடிவுகள் வெளியாகியது. இதில், தமிழகத்தில் இருந்து 1,14,602 மாணவ மாணவிகள் தேர்வு எழுதியிருந்த நிலையில், வெறும் 45,336 பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த நிலையில், நீட் தேர்வு முடிவுகளின் அடிப்படையில் தற்போது சென்னையில் மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு நடந்து வருகிறது. முதல்கட்ட கலந்தாய்வு முடிவில் கடலூர் மாவட்டம் கொடையூரைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர் அலெக்‌ஸ்பாண்டியனுக்கு மட்டும் மருத்துவ படிப்பிற்கான இடம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சாதாரண குடும்பத்தில் பிறந்த அலெக்‌ஸ்பாண்டியனின் தந்தை ரங்கராஜன் சத்துணவு பணியாளராக இருக்கிறார். 12ம் வகுப்பில் 1111 மதிப்பெண்கள் பெற்ற அலெக்‌ஸ்பாண்டியன், சென்னை சத்யபாபா கல்லூரி நடத்திய நீட் பயிற்சித் தேர்வில் சேர்ந்தார்.

இதையடுத்து, நீட் தேர்வு எழுதிய அவர், 306 மதிப்பெண்கள் பெற்றார். இதையடுத்து தமிழக மருத்துவ கலாந்தாய்வில் கலந்து கொண்ட அலெக்‌ஸ் பாண்டியனுக்கு திருச்சி கே.ஏ.பி.விஸ்வநாதம் அரசு மெடிக்கல் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. கடந்த 1ம் தேதி முதல் நடந்துவரும் கலந்தாய்வில் 8 அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு மருத்துவ பள்ளிகளில் இடம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி