ஆப்நகரம்

நீட் தேர்வு எழுத ரயிலில் புறப்பட்ட நெல்லை மாணவர்கள்!

நீட் தேர்வு எழுதுவதற்காக நெல்லையைச் சேர்ந்த மாணவர்கள் ரயிலின் மூலம் கேரளவிற்கு கிளம்பியுள்ளனர்

Samayam Tamil 4 May 2018, 5:43 pm

நீட் தேர்வு எழுதுவதற்காக நெல்லையைச் சேர்ந்த மாணவர்கள் ரயிலின் மூலம் கேரளவிற்கு கிளம்பியுள்ளனர்

இந்தியா முழுவதும் மருத்துவ சேர்க்கைக்கான நீட் தகுதித் தேர்வு வருகிற 6-ந் தேதி நடைபெறுகிறது. நீட் தேர்வை எழுதுதற்காக தமிழகத்தில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்படவில்லை. இதனால் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் பிற மாநிலங்களுக்கு சென்று தேர்வெழுதக் கூடிய நிலை உருவாகியுள்ளது.

இந்த நிலையில் பாளையங்கோட்டையில் உள்ள ஒரு பள்ளியில் நீட் தேர்வு பயிற்சி வகுப்பின் இறுதிநாள் வகுப்பு நேற்று நடைபெற்றது. இதில் மாணவ-மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது தேர்வு எழுத கேரளா செல்லும் மாணவர்கள் மொத்தமாக செல்லலாமா என ஆலோசிக்கப்பட்டது. ஆனால் கொச்சி,எர்ணாகுளம், திருவனந்தபுரம் என பல்வேறு இடங்களில் மையம் அமைக்கப்பட்டதால் மொத்தமாக செல்லும் திட்டம் கைவிடப்பட்டு தனித்தனியாக செல்ல முடிவு செய்யப்பட்டது.
Samayam Tamil salnaljsdl


மேலும் கடந்த ஆண்டு நீட் தேர்வெழுத கேரளாவுக்கு சென்றவர்கள் லாட்ஜ்களில் தங்க இடமில்லாததால் சாலையோரங்களில் தங்கி பொதுகழிப்பிடங்களை பயன்படுத்தினர். எனவே இந்தாண்டும் தங்கும் விடுதிகளில் இடம் கிடைக்குமா என்ற அச்சத்துடன் மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் வெளி மாநிலத் தேர்வு மையங்களுக்கு புறப்பட்டு சென்றுள்ளனர்.

அடுத்த செய்தி