ஆப்நகரம்

நீட் நுழைவுத் தேர்வு காரணமாக வேளாண் படிப்புகளுக்கான தேவை அதிகரிக்கும்: கல்வியாளர்கள் தகவல்

நீட் நுழைவுத் தேர்வு எதிரொலியால், வேளாண் படிப்புகளை மாணவ, மாணவியர் தேர்வு செய்வது வரும் காலத்தில் அதிகரிக்கும் என, கல்வியாளர்கள் எதிர்பார்ப்பு தெரிவித்துள்ளனர்.

TNN 9 May 2017, 10:21 pm
நீட் நுழைவுத் தேர்வு எதிரொலியால், வேளாண் படிப்புகளை மாணவ, மாணவியர் தேர்வு செய்வது வரும் காலத்தில் அதிகரிக்கும் என, கல்வியாளர்கள் எதிர்பார்ப்பு தெரிவித்துள்ளனர்.
Samayam Tamil neet result may raise demand for agri courses tnau vice chancellor says
நீட் நுழைவுத் தேர்வு காரணமாக வேளாண் படிப்புகளுக்கான தேவை அதிகரிக்கும்: கல்வியாளர்கள் தகவல்


மருத்துவப் படிப்புகளுக்காக, நாடு முழுவதும் நீட் என்ற பெயரில் ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதில், தமிழக அரசின் மாநில கல்வி பாடத்திட்டத்தின்கீழ் படித்தவர்கள், வெற்றிபெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக, நீட் தேர்வுக்கான பாடத்திட்டம், அதில் கேட்கப்படும் கேள்விகள் மிகக் கடினமாக உள்ளதாக, தமிழ் வழியில் பயிலும் மாணவர்கள் குறிப்பிடுகின்றனர். இதனால், மருத்துவம் படிக்க வேண்டும் என்ற லட்சியத்தை கைவிட்டுவிட்டு, வரும் நாட்களில் பல மாணவர்கள் வேளாண் படிப்பு உள்ளிட்ட இதர கலை, அறிவியல் பட்டப்படிப்புகளை தேர்வு செய்யும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

இதுபற்றி கோவை வேளாண் பல்கலைக்கழக துணை வேந்தர் ராமசாமி கூறுகையில்,’’மே 12ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகின்றன. இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற நீட் தேர்வு, கடினமானதாக இருந்ததாக, பல மாணவ, மாணவியர் கூறியுள்ளனர். இதையடுத்து, மருத்துவப் படிப்பில் இருந்து, அவர்களின் கவனம் திசைதிரும்பி, வேளாண்மையியல் உள்ளிட்ட இதர கலை, அறிவியல் படிப்புகள் மீது செல்ல வாய்ப்புள்ளது. பிளஸ் 2 தேர்வு முடிவுகளுக்குப் பின், இந்த படிப்புகளுக்கான விண்ணப்பம் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கிறோம்,’’ எனக் குறிப்பிட்டார்.

The National Eligibility cum Entrance Test (NEET) is expected to increase the demand for agricultural courses, said vice-chancellor of Tamil Nadu Agricultural University (TNAU) K Ramasamy on Tuesday.

அடுத்த செய்தி