ஆப்நகரம்

தமிழக பாடநூலில் நெல் ஜெயராமன் வாழ்க்கை பாடமாக்க வேண்டும்: தங்கர் பச்சான்!

சென்னை: நெல் ஜெயராமன் வாழ்க்கை தமிழக பாடநூலில் பாடமாக இடம்பெறவேண்டும் என்று இயக்குனர் தங்கர் பச்சான் கூறியுள்ளார்.

Samayam Tamil 8 Dec 2018, 6:13 pm
நெல் ஜெயராமன் குறித்து இயக்குனர் தங்கர் பச்சான் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‘‘மற்றவர்கள் விட்டுச் சென்ற பணிகளை செய்ய பலரும் இருக்கிறார்கள்.
Samayam Tamil Nel Jayaraman


ஆனால் இவர் விட்டுச் சென்ற பணியைச் செய்ய யார் இருக்கிறார்கள்? மரபு மாற்று பயிர்களுக்கு எதிராக போராடியவர். அடுத்த தலைமுறைகளுக்காகவே வாழ்ந்தவர். நெல் ஜெயராமன் விட்டு சென்ற பணியை அரசு தொடர வேண்டும்.

எதை எதையோ பள்ளிப் பாடங்களில் கற்றுத் தருபவர்கள் விவசாயம் குறித்து கட்டாயம் மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும். தமிழக முதல்வர், வேளாண்மை அமைச்சர், பள்ளிக்கல்வி அமைச்சர் அனைவருமே உழவு குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான்.

எனவே அவர் விட்டுச்சென்ற பணியைத் தொடர கடமை இருக்கிறது. நெல் ஜெயராமன் வாழ்க்கை வரலாற்றை பள்ளி மாணவர்களுக்கு பாடமாக்க வேண்டும். அது தான் அவருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

அடுத்த செய்தி