ஆப்நகரம்

யாரும் கொடுக்கலாம் , இல்லாதோர் எடுக்கலாம் : நெல்லை கலெக்டர் அதிரடி திட்டம்

நெல்லையில் விளிம்புநிலை மக்கள் , ஏழைகள் பயன்பெறும் வகையில் பழைய பொருட்கள் , புத்தக மையம் அமைக்க நெல்லை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டுள்ளார்.

TNN 20 Jul 2017, 5:34 pm
நெல்லை : நெல்லையில் விளிம்புநிலை மக்கள் , ஏழைகள் பயன்பெறும் வகையில் பழைய பொருட்கள் , புத்தக மையம் அமைக்க நெல்லை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டுள்ளார்.
Samayam Tamil nellai collector sandeep nanduri ias intro new scheme for poor people
யாரும் கொடுக்கலாம் , இல்லாதோர் எடுக்கலாம் : நெல்லை கலெக்டர் அதிரடி திட்டம்


நெல்லை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி விளிம்புநிலை மக்கள் , ஏழைகள் பயன்பெறும் வகையில் பழைய பொருட்கள் , புத்தக மையம் அமைக்கப்படும் என்று உத்தரவிட்டிருந்தார். அந்த பழைய பொருட்கள் , புத்தக மையம் கட்டிட வேலைகள் தற்போது மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைப்பெற்று வருகிறது.

இந்த மையத்தில் மக்கள் தங்களிடம் உள்ள பழைய பொருட்கள் மற்றும் புத்தகங்களை கொண்டு வந்து தரலாம். இந்த புத்தகங்கள் மற்றும் பொருட்கள் ஏழை எளியவர்களுக்கு இலவசாமாக வழங்கப்படும். அதே போல ஏழை எளியவர்களுக்கு அந்த மையத்தில் உள்ள பொருட்களில் தங்களுக்கு வேண்டிய பொருட்களை இலவசமாக எடுத்துக்கொள்ளலாம்.

பழைய பொருட்கள் , புத்தக மையம் கட்டுமான பணிகள் முடிவடைந்த உடன் இந்த மையம் உடனடியாக் செயலுக்கு வரும். நெல்லை மாவட்ட கலெக்டராக சந்தீப் நந்தூரில் பதவியேற்று சில மாதங்கள் தான் ஆகிறது. அதற்குள் அவர் நெல்லை தாமிரபரணி ஆற்றை சுத்தப்படுத்துவது உள்ளிட்ட ஆக்கப்பணிகளில் ஈடுப்பட்டுவருவது அம்மாவட்ட மக்களிடையே பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.

அடுத்த செய்தி