ஆப்நகரம்

கொட்டித் தீர்த்த மழையால், வேகமாக நிரம்பும் நெல்லை அணைகள்!

கனமழை காரணமாக, அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

TNN 11 Sep 2017, 12:50 pm
நெல்லை: கனமழை காரணமாக, அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
Samayam Tamil nellai heavy rain increases water level in dams
கொட்டித் தீர்த்த மழையால், வேகமாக நிரம்பும் நெல்லை அணைகள்!


நெல்லை மாவட்டத்தில் ஓராண்டிற்கும் மேலாக கடும் வறட்சி நிலவி வந்தது. இதனால் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக பாளையில் 33மிமீ மழையும், நெல்லை, ராதாபுரத்தில் 29மிமீ, ராதாபுரம் பகுதியில் 11மிமீ மழையும் பதிவாகியுள்ளது.

மேலும் பாபநாசம் 15, சேர்வலாறு 14, மணிமுத்தாறு 7, ராமநதி 10, கருப்பாநதி 2, கொடுமுடியாறு 15 மிமீ மழை பதிவாகியுள்ளது. தொடர் மழை காரணமாக நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

இதையடுத்து பொதுமக்களின் குடிநீர் தேவையை ஓரளவு பூர்த்தி அடைந்துள்ளது. கனமழையால் அணைகளின் நீர்மட்டமும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

தற்போது பாபநாசம் அணையின் நீர்மட்டம் 70.10 அடியாகவும், சேர்வலாறு அணையில் 13 அடியாகவும் உள்ளன.

Nellai heavy rain increases water level in Dams.

அடுத்த செய்தி