ஆப்நகரம்

சகல வசதியுடன் '60 சொகுசு கேரவன்'... ராகுல்காந்தி கண்டெய்னருக்குள் என்ன இருக்கு?

இந்திய ஒற்றுமை பயணம் மேற்கொள்ளும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு படுக்கை வசதியுடன் கொண்ட சொகுசு வாகனங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக இணையத்தில் செய்தி பரவுகிறது.

Samayam Tamil 9 Sep 2022, 3:13 pm
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் நோக்கி இந்திய ஒற்றுமை பயணம் என்ற பெயரில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். மொத்தம் 151 நாட்கள் 3 ஆயிரத்து 571 கிலோமீட்டர் தூரம் நடை பயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பயணத்தை கன்னியாகுமரியில் இருந்து தொடங்கிய ராகுல் காந்தி பேசியபோது, அழகான தமிழ்நாட்டுக்கு வருவது எப்போதும் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. 3 சமுத்திரமும் சங்கமிக்கும் இந்த இடத்தில் தேச ஒற்றுமைக்கான பயணத்தை தொடங்குவதில் மகிழ்ச்சி. சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்கு பின்னரும் இந்தப் பயணம் ஏன் என்ற கேள்வி எழுகிறது. நாட்டை ஒற்றுமைப்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர் எனவும் அவர் கூறினார்.
Samayam Tamil rahul gandhi


அந்த தொடக்க நிகழ்ச்சியின்போது தமிழக முதல்வர் ஸ்டாலினும் பங்கேற்றார். இந்நிலையில், ராகுல்காந்தியுடன் இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் கலந்துகொள்ள அந்தந்த மாவட்ட காங்கிரஸ் தொண்டர்களும், இளைஞர்களும் சேர்ந்து பயணிக்கின்றனர். அந்தந்த பகுதி காங்கிரஸ் நிர்வாகிகளை சந்திக்கும் ராகுல்காந்தி பயணத்துக்கிடையே அவர்களுடன் உரையாடி வருகிறார்.


இந்நிலையில், ராகுல்காந்தி நடைப்பயணத்தின் மூன்றாவது நாளான இன்று காலையில் நாகர்கோயிலில் இருந்து தொடங்கியது. பின்னர் தங்களை அருகே புலியூர் குருச்சியில் நிறைவடைந்தது. அவர் காலை பயணத்தை நிறைவு செய்த போது புலியூர்குறிச்சியை சேர்ந்த ஏராளமானோர் ராகுல்காந்தியுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

இந்த பயணம் இப்படி சென்று கொண்டிருக்க, பாஜகவினர் ராகுல் காந்தியின் பயணத்தை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். பாஜகவை சேர்ந்த கிஷோர் கே சாமி தனது ட்விட்டர் பக்கத்தில், ராகுல் காந்தி தனது பயணத்தில் 60 சொகுசு கேரவனுடன் செல்வதாக குறிப்பிட்டு ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். மக்களுக்கான யாத்திரை என்றால் அந்தந்த பகுதியில் உள்ள தன் தொண்டன் வீட்டில் தங்கி உணவு அருந்த வேண்டும். ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு செல்வதற்கு வேண்டும் என்றால் வாகனத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால், 60 சொகுசு கேரவன் பயன்படுத்துவது என்பது யாத்திரை அல்ல சுற்றுலாபயணம் என்றும் நெட்டிசன்கள் விமர்சித்துள்ளனர். அதே சமயம், ''அதுக்குன்னு அவர் என்ன ரோட்லயா படுக்க முடியும்''? ''ஸ்டார் ஹோட்டல்ல தங்கனா இவ்வளவு வசதியாக, சுகமாக தங்குகிறார் என்று சொல்வீங்க'' என ராகுல் காந்திக்கு ஆதரவாகவும் பேசி வருகின்றனர்.

அடுத்த செய்தி