ஆப்நகரம்

ஆதிபுருஷ்... 'தியேட்டரில் ஒரு சீட் அனுமனுக்கு'.. நெட்டிசன்கள் கருத்து இதுதான்..!

ஆதிபுருஷ் திரைப்படம் ரிலீசாகும் தியேட்டரில் ஒரு சீட் அனுமனுக்கு ஒதுக்கப்படும் என்று தயாரிப்பு நிறுவனத்தின் அறிவிப்புக்கு நெட்டிசன்களின் கருத்து

Authored byதிவாகர் மேத்யூ | Samayam Tamil 6 Jun 2023, 1:00 pm
தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடித்துள்ள ஆதிபுருஷ் திரைப்படம் வரும் 16 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் ஆகிய 5 மொழிகளில் வெளியாகிறது. இந்நிலையில், ராமாயணத்தை தழுவி உருவாகியுள்ள இந்தப் படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் திரையரங்கின் ஒரு சீட்டை ஆஞ்சநேயருக்காக காலியாக விடப்படும் என்று ஆதிபுருஷ் பட தயாரிப்பு நிறுவனமான UV கிரியேஷன்ஸ் அறிவித்துள்ளது.
Samayam Tamil adipurush


இந்த விசித்திரமான அறிவிப்புக்கு கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. மேலும் அதை அரசிய ரீதியாகவும் தொடர்புபடுத்தி மீம்ஸ் பகிர்ந்து வருகின்றனர். குறிப்பாக ஒருவரது பதிவில், 'வந்ததும் தெரியாம போனதும் தெரியாம’ எனும் சாத்தியம் உள்ள படம் ஆதிபுருஷ். ஆனால், 'அனுமனுக்காக தியேட்டரில் ஒரு இருக்கையை நிரப்பாமல் விடுவோம்’ எனும் மிக எளிய அறிவிப்பின் மூலம் செய்தி மற்றும் சமூக ஊடகங்களில் பலரையும் பேச வைத்த, பட நிறுவனத்தின் தந்திரத்தை பாராட்டியே தீர வேண்டும் என்று கூறியிருக்கிறார். அந்த வகையில் சமூக வலைத்தளத்தில் நெட்டிசன்கள் கூறி வரும் கருத்துக்களை பார்க்கலாம்.


' தமிழ்நாடு‌ be like

இந்த மாதிரி ஒரு சீட்டு ரெண்டு சீட்டுன்னுலாம் உன்னை அடைக்க விரும்பலை ஆஞ்சநேயா..

தியேட்டர்ல இருக்க மொத்த சீட்டும் உனக்குத்தான்..'

ஒரு சீட்டு என்ன..

'ஒரு சீட்டு என்ன முக்காவாசி சீட்டையும் ஆஞ்சிநேயரே எடுத்துப்பாரு கவலை வேணாம்

வரவர இந்த தெலுங்கு ஹீரோங்க மொத்தபேரும் தெலுங்குதேசத்த உபியா மாத்துற அஜண்டாவுல இருக்காங்க போல;

' 3வது ஷோவுலயே ஆஞ்சநேயர் மட்டும்தான் இருப்பாரு ஜீ..'


~Interval
அந்த சீட்டுகளுக்கு வடைமாலை சாத்தலாம்னு வந்துருக்கோம்..'


சத்யம்ல பாப்கார்ன் சாப்ட்ருக்கியா நல்லாருக்கும், இவர் தான் பிரபாஸ்..பாகுபலி பாத்துருக்கியா...?

~ ஏன்டா யார்ட்ட பேசிட்டு இருக்க.?

யார்ட்டயா.... அனுமார்ட்ட டா...


ஆதிபுருஷ் ஓடும் தியேட்டர்களில் அனுமாருக்கு தனி இருக்கை…

அடுத்து என்ன உள்ள செருப்பு போட்டு வரக்கூடாது, snacks counter ல veg only, இடைவேளையில பிரசாதமா…

~அவனுங்க அதெல்லாம் பண்ணக்கூடிய ஆளு தாங்க..
எழுத்தாளர் பற்றி
திவாகர் மேத்யூ
திவாகர். நான் தொலைக்காட்சி, நியூஸ் ஆப், செய்தி இணைதளம் என ஊடக துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வருகிறேன். எழுத்தின் மீதான ஆர்வமும் ஊடகத்தின் மீது இருக்கும் பற்றால் இத்துறையை தேர்வு செய்துள்ளேன். அரசியல், குற்றம், அரசியல் - குற்றம் சார்ந்த அலசல், அரசு சார்ந்த செய்திகளை எவ்வித சமரசமும் இல்லாமல் எழுதி வருகிறேன். கடந்த 3 ஆண்டுகளாக TIMES Of INDIA சமயம் தமிழில் Senoir Digital Content Producer ஆக பணியாற்றுகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி