ஆப்நகரம்

புதிய வகை பறவை காய்ச்சல்: மத்திய அரசு அறிவுறுத்தல்

இந்தியாவில் பரவும் புதிய வகை பறவைக் காய்ச்சல் குறித்து எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக அனைத்து மாநில பறவைகள் சரணாலயங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

TNN 22 Oct 2016, 3:42 pm
புதுதில்லி: இந்தியாவில் பரவும் புதிய வகை பறவைக் காய்ச்சல் குறித்து எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக அனைத்து மாநில பறவைகள் சரணாலயங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
Samayam Tamil new bird flu spread in india centre urges preventive action
புதிய வகை பறவை காய்ச்சல்: மத்திய அரசு அறிவுறுத்தல்


தலைநகர் தில்லியில் உள்ள தேசிய பறவைகள் சரணாலயத்தில் பறவைகள் மர்மமான முறையில் உயிரிழந்தது. இதனால், பறவைக் காய்ச்சல் சந்தேகம் எழுந்தது. அதேவேளையில், மத்தியப் பிரதேசம் குவாலியரில் உள்ளது காந்தி உயிரியல் பூங்காவில் கடந்த 3 நாட்களில் மட்டும் 15 பறவைகள் திடீரென உயிரிழந்தன.

இதனிடையே, H5N8 என்ற புதிய வகை வைரஸ் நோய் காரணமாக அவை இறந்துள்ளதாக கண்டறியப்பட்டு தெரிவிக்கப்பட்டது. அதேபோல், தில்லி பூங்காவிலும் இதே வகை காய்ச்சலால் தான் பறவைகள் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, இரண்டு பூங்காக்களும் மூடப்பட்டுள்ளது.

இந்நிலையில், புதிய பறவைக் காய்ச்சல் குறித்து எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, அனைத்து மாநில பறவைகள் சரணாலயங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
New bird flu spread in India: Centre urges Preventive action #H5N8

அடுத்த செய்தி