ஆப்நகரம்

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா: அமலுக்கு வந்த புதிய கட்டுப்பாடுகள்!

கொரோனா பரவல் காரணமாக புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

Samayam Tamil 4 Aug 2021, 7:12 pm
தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு 36 ஆயிரம் என்ற அளவிலிருந்து 1750 வரை குறைந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் இரண்டாயிரத்தை நோக்கி அதிகரித்து வருகிறது. மக்கள் நெருக்கம் அதிகமுள்ள சென்னை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் பாதிப்பு அதிகரித்து வருவதால் அடுத்த அலை ஆரம்பமாகிவிட்டதா என்றும் கேள்விகள் எழுகின்றன.
Samayam Tamil tn lockdown


சென்னையில் மக்கள் அதிகம் கூடும் தி.நகர் உள்ளிட்ட முக்கிய இடங்களில் கடைகள் திறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் நேற்று முதல் (ஆகஸ்ட் 3) முதல் காய்கறி, மளிகைக் கடைகள், பேக்கரிகள், டீ கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
குடும்பத் தலைவிகளுக்கு 1000 ரூ: அமைச்சர் சொன்ன அசத்தல் தகவல்!
*மீன, இறைச்சிக் கடைகள் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையிலும், டாஸ்மாக் மதுபானக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

*சுற்றுலாத் தலங்கள், அருங்காட்சியகங்களில் பொது மக்கள் பாா்வைக்கு தடை விதிக்கப்படுகிறது. அனைத்து பூங்காக்களும் ஞாயிற்றுக்கிழமை மட்டும் பொது மக்கள் செல்ல தடை விதிக்கப்படுகிறது.


*மாவட்டத்தில் உள்ள மால்கள், பன்னடுக்கு வணிக வளாகங்கள் ஞாயிற்றுக்கிழமை இயங்க தடை விதிக்கப்படுகிறது.

*மேலும் மால்களில் உள்ள உணவகங்களுக்கு ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள நடைமுறைகள் பொருந்தும்.
அறிவாலயத்தில் கிண்டும் அல்வா: யாருக்குன்னு இப்போ சொல்ல முடியாதாம்!
*பொள்ளாச்சி மாட்டுச் சந்தை இன்று (ஆகஸ்ட் 4) முதல் இயங்க தடைவிதிக்கப்படுகிறது.

கொரோனா பரவல் காரணமாக சென்னை, கோவை, பெரம்பலூர் என பல மாவட்டங்களில் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் விரைவில் இவை மற்ற பகுதிகளிலும் அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி