ஆப்நகரம்

நாளை உருவாகிறது புதிய புயல்!

அந்தமான் அருகே உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மணடலம் நாளை புயலாக மாறவாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Samayam Tamil 6 Nov 2019, 2:16 pm
அரபிக்கடல் பகுதியில் உருவாகியுள்ள அதி தீவிர புயலான மஹா நாளை குஜராத அருகே கரையைக் கடக்கவுள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் அந்தமான் அருகே நாளை மற்றொரு புதிய புயல் உருவாகவுள்ளது.
Samayam Tamil new cyclone will be forming in andaman area tomorrow november 7th says chennai meteorological department
நாளை உருவாகிறது புதிய புயல்!


அந்தமான் அருகே குறைந்தழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறுகிறது!!

அந்தமான் அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளது. இது மேலும் வலுப்பெற்று நாளை புயலாக மாற வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் மாசுக் காற்று அதிகரிப்பு!!

அந்தமான் பகுதியில் மத்திய கிழக்கு வங்கக்கடல், தென்கிழக்கு வங்ககடல், மத்திய வங்க கடல், வடக்கு கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவேண்டாம் என எச்சரிக்கைவிடப்பட்டுள்ளது.

காற்று மாசின் அவலத்தை தான் வரைந்த ஒரே படத்தில் உணர்ந்திய 9 வயது சிறுமி

அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழ்நாடு, புதுச்சேரியில் பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலையும், தென் தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் வெப்ப சலனம் காரணமாக ஓரிரு லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி