ஆப்நகரம்

இன்னும் 3 நாள்கள் தான்: உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி!

புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி நவம்பர் 9ஆம் தேதி உருவாக உள்ளதாக கூறப்படுகிறது.

Samayam Tamil 6 Nov 2021, 12:30 pm
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அக்டோபர் 25ஆம்தேதி தொடங்கிய பருவமழையால் மழை வெளுத்து வாங்குகிறது.
Samayam Tamil northeast monsoon


பல மாவட்டங்களில் குளங்கள், கண்மாய் உள்ளிட்ட நீர் நிலைகள் நிறைந்துள்ளன. பல ஊர்களில் விளை நிலங்களில் வெள்ளம் பாய்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கையை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத்தாழ்வுப் பகுதி நவம்பா் 9ஆம் தேதி உருவாக வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேகர் பாபுவுக்கு எச்சரிக்கை விடுக்கும் ஹெச்.ராஜா
தெற்கு வங்கக்கடலின் மத்தியப்பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி அக்டோபர் 27ஆம்தேதி உருவானது. இது, தென்மேற்கு வங்கக்கடல், குமரிக்கடல் பகுதிக்கு அடுத்தடுத்து நகா்ந்து சென்றது. இதுதவிர, தமிழக பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகி நிலைகொண்டது. இவற்றின் காரணமாக, தமிழகத்தில் அநேக இடங்களில் கடந்த ஒரு வாரமாக மிதமான மழையும், சில மாவட்டங்களில் கனமழையும் கொட்டியது.
அதிமுக ஆட்சியில் ஊழல்: அண்ணாமலை குற்றச்சாட்டு - அப்போ கூட்டணி அவ்வளவு தானா?
தற்போது, மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால், தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நவம்பா் 9ஆம் தேதி உருவாக வாய்ப்பு உள்ளது.

இது உருவாகும் பட்சத்தில் மேற்கு நோக்கி நகா்ந்து, தமிழகம்-ஆந்திர கடற்கரை இடையே வர வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது.

அடுத்த செய்தி