ஆப்நகரம்

41 பள்ளிகளில் புதிய கட்டங்கள், நூலகங்கள் திறப்பு!

தமிழகத்தில் 41 அரசு பள்ளிகளில்புதிதாக கட்டங்கள் மற்றும் நூலகங்களையும், சென்னை பள்ளிக்கல்வி இயக்கத்தில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கட்டத்தையும் முதல்வர் பழனிசாமி திறந்து வைத்துள்ளார்.

Samayam Tamil 7 Aug 2018, 12:48 pm
தமிழகத்தில் 41 அரசு பள்ளிகளில்புதிதாக கட்டங்கள் மற்றும் நூலகங்களையும், சென்னை பள்ளிக்கல்வி இயக்கத்தில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கட்டத்தையும் முதல்வர் பழனிசாமி திறந்து வைத்துள்ளார்.
Samayam Tamil School Library



முதல்வர் பழனிசாமி நேற்று தலைமைச் செயலகத்தில், பள்ளிக் கல்வித் துறை சார்பில் சென்னையில் உள்ள பள்ளி கல்வி இயக்கக வளாகத்தில் 39 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள "எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா” கட்டடத்திற்கு காணொலிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார். மேலும், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில், 111 கோடியே 68 லட்சத்து 98 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பள்ளிக் கட்டடங்கள் மற்றும் கிளை நூலக கட்டடம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.

முதல்வர் பழனிசாமி 19.6.2017 அன்று சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், “சென்னை, டி.பி.ஐ. வளாகத்தில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் பள்ளிக் கல்வி இயக்ககத்தின் கட்டடம் மிகவும் பழமை வாய்ந்ததாகும். இதனால், இதனை பராமரிப்பது கடினமாகவும், மிகுந்த செலவினம் கொண்டதாகவும் உள்ளது. அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் தொடர்பாக பல்வேறு மாவட்டங்களிலிருந்து அலுவலர்களும், பணியாளர்களும் அதிக அளவு இங்கு வந்து செல்ல வேண்டிய நிலை உள்ளதாலும், இந்த இயக்ககத்தில் இயங்கும் பல்வேறு பிரிவுகளுக்காக கூடுதல் இடவசதி தேவைப்படுவதாலும், பள்ளிக் கல்வி இயக்ககத்திற்கு மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்களின் நூற்றாண்டு விழாவினைக் குறிக்கும் வகையில் “புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கட்டடம்” என்ற பெயரில் புதிய கட்டடம் கட்டப்படும்” என்று அறிவித்தார்.


அந்த அறிவிப்பிற்கிணங்க, பள்ளிக் கல்வித் துறை சார்பில் சென்னை, நுங்கம்பாக்கம், கல்லூரி சாலையில் உள்ள பள்ளி கல்வி இயக்கக வளாகத்தில், 39 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கட்டடத்திற்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் காணொலிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார்.

மேலும், நபார்டு கடனுதவி திட்டத்தின் கீழ், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி, தஞ்சாவூர், தேனி, திருவள்ளூர், திருச்சிராப்பள்ளி, திருவண்ணாமலை, வேலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள 30 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 51 கோடியே 26 லட்சத்து 23 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 219 வகுப்பறைக் கட்டடங்கள், 30 ஆய்வகக் கட்டடங்கள், குடிநீர் வசதி, கழிவறைகள் மற்றும் சுற்றுச்சுவர்; ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் கீழ், அரியலூர், கோயம்புத்தூர், கடலூர், திண்டுக்கல், கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், தேனி, திருப்பூர், திருவாரூர், திருவள்ளூர், திருச்சிராப்பள்ளி, திருவண்ணாமலை, விழுப்புரம், மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள 41 அரசு உயர்நிலைப் பள்ளிகளில் 59 கோடியே 87 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் திப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 41 பள்ளிக் கட்டடங்கள்; பொது நூலக இயக்ககத்தின் கீழ், திருவள்ளூர் மாவட்டம், மணவாள நகரில் 55 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கிளை நூலக கட்டடம்; என மொத்தம், 111 கோடியே 68 லட்சத்து 98 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களைமுதலமைச்சர்பழனிசாமி திறந்து வைத்தார்.


இந்த நிகழ்ச்சியில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர்ஜெயகுமார், தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ்ப் பண்பாட்டுத் துறை அமைச்சர் பாண்டியராஜன், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர்வளர்மதி, தலைமைச் முனைவர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

அடுத்த செய்தி