ஆப்நகரம்

தமிழகத்தில் இறுகும் கட்டுப்பாடுகள்; இன்று முதல் பரபரப்பு அறிவிப்பு!

கொரோனாவை தடுக்கும் நடவடிக்கையாக இன்று முதல் பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன.

Samayam Tamil 11 Apr 2021, 6:30 am
தமிழகத்தில் கடந்த ஆண்டைப் போல நாளுக்கு நாள் கோவிட்-19 தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனை கொரோனாவின் இரண்டாவது அலை என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். இன்று காலை நிலவரப்படி தமிழ்நாட்டில் மொத்தம் 9,26,816 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதில் 8,76,257 பேர் குணமாகி வீடு திரும்பிவிட்டனர். 12,886 பேர் பலியாகியுள்ளனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 2 கோடி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
Samayam Tamil new lockdown restrictions implemented from today april 11th in tamil nadu
தமிழகத்தில் இறுகும் கட்டுப்பாடுகள்; இன்று முதல் பரபரப்பு அறிவிப்பு!


4ஆம் இடத்தில் தமிழகம்

தற்போது 37,673 பேர் மட்டும் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தைப் பொறுத்தவரை புதிதாக 5,989 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,952 பேர் குணமடைந்துள்ளனர். 23 பேர் பலியாகி இருக்கின்றனர். 84 ஆயிரம் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் கொரோனா பாதிப்பிற்கு ஆளான மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு நான்காம் இடத்தில் இருக்கிறது.

நேற்று முதல் அமலான கட்டுப்பாடுகள்

இந்த சூழலில் கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நேற்று முதல் பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது. அதில், வெளிமாநிலங்களில் இருந்து வருவோருக்கு இ-பாஸ், திருவிழாக்களுக்கு தடை, உணவகங்கள், கடைகளை இரவு 11 மணிக்குள் மூட வேண்டும். வழிபாட்டுத் தலங்களில் இரவு 8 மணி வரை மட்டுமே அனுமதி, திரையரங்குகள், பூங்காக்களில் 50 சதவீதம் பேர் மட்டுமே அனுமதி, பேருந்துகளில் இருக்கைகளில் உட்கார்ந்து மட்டுமே பயணிக்க அனுமதி உள்ளிட்டவை அடங்கும்.


தமிழ்நாட்டிற்கு வர இ-பாஸ் எப்படி விண்ணப்பிப்பது? இதோ செம ஈஸி வழி!

இரவுநேர ஊரடங்கு எச்சரிக்கை

இந்த கட்டுப்பாடுகள் பலனளிக்கவில்லை எனில், இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று மாநில அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில் தமிழக அரசு புதிதாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு நேற்று (ஏப்ரல் 10) முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன.


அற்புதமான படம் மிஸ் பண்ணிடாதீங்க: பிரபல நடிகரின் 'கர்ணன்' திரைப்பட விமர்சனம்!

வார இறுதியில் தடை

இதனைத் தொடர்ந்து புதிய கட்டுப்பாடுகளும்/ தளர்வுகளும் இன்று (ஏப்ரல் 11) முதல் அமலுக்கு வருகின்றன. அதன்படி, சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களிலும் உள்ள அனைத்து கடற்கரை பகுதிகளிலும், சனி, ஞாயிறு மற்றும் அனைத்து அரசு விடுமுறை நாட்களிலும் பொதுமக்கள் கூடுவது 11.04.2021 முதல் தடை செய்யப்படுகிறது.

இரவு 10 மணி வரை நீட்டிப்பு

அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பொதுமக்கள் வழிபாடு செய்ய இரவு 8 மணி வரை அனுமதிக்கப்படும் என்ற கட்டுப்பாடு, தற்போது சம்பந்தப்பட்ட வழிபாட்டுத் தலங்களின் வழக்கமான நேரம் வரையிலோ அல்லது அதிகபட்சம் இரவு 10 மணி வரையிலோ பொதுமக்கள் வழிபாட்டிற்காக மாநில அரசு வெளியிட்ட நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி அனுமதிக்கப்படுகிறது.


தமிழக ரேஷன் அட்டைதாரர்களை பதறவைத்த எஸ்.எம்.எஸ்; இப்படியொரு மோசடி!

கூடுதலாக ஒரு காட்சி

இருப்பினும் அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும், திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்த அனுமதி இல்லை. தமிழகத்தில் கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் காலகட்டத்தில் வெளியிடப்படும் புதிய திரைப்படங்கள், முதல் ஏழு நாட்களுக்கு மட்டும் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட காட்சிகளை விட கூடுதலாக ஒரு காட்சி, அரசு வெளியிடும் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியும், அனைத்து காட்சிகளிலும் 50 சதவீத இருக்கைகளை மட்டுமே பயன்படுத்தி திரையிட அனுமதிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி