ஆப்நகரம்

புதிய ரேஷன் அட்டைதாரர்களுக்கு நாளை முதல் சர்ப்ரைஸ்: அமைச்சர் தகவல்!

தமிழகத்தில் புதிய ரேஷன் அட்டைக்காக விண்ணப்பித்தவர்களில் தகுதியுடைய மூன்று லட்சம் பேருக்கு ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார்.

Samayam Tamil 31 Jul 2021, 4:21 pm
தமிழகத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக மீண்டும் தொடங்கிய புதிய ரேஷன் அட்டைகளை விநியோகம் செய்யும் பணிகள் மூலம் இதுவரை 3 லட்சம் பேருக்கு ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஆகஸ்ட் 1 முதல் அவர்கள் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் என உணவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil tn new ration card


திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' என்ற தலைப்பின் கீழ் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட உணவுத்துறை அமைச்சர் ஆர்.சக்கரபாணி அமைப்புச்சாரா தொழிலாளர்களுக்கான நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்தார்.
ஆகஸ்ட் 20 பள்ளிகள் திறப்பு? முதல்வர் வெளியிடும் அறிவிப்பு?
இதற்கு பின்பாக செய்தியாளார்களை சந்தித்து பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, “தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற திட்டத்தில் பலர் தங்களது கோரிக்கைகளை அனுப்பி அரசிடம் இருந்து பதில்களை பெற்று வருகின்றனர்.

அந்த வகையில் இத்திட்டத்தின் கீழ் திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் 1845 மனுக்கள் பெறப்பட்டன. அதில் 891 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள நிலையில் 266 மனுக்கள் நடவடிக்கையிலும், 668 மனுக்கள் மறுபரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் தமிழக அரசின் கூட்டுறவு சங்கங்களில், மக்களின் கோரிக்கைகளுக்கு ஏற்ப மகளிருக்கான சிறுதொழில் கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது” என கூறியுள்ளார்.
பள்ளிகள் திறப்பு: தொடரும் ஆலோசனை - முதல்வர் எடுக்கும் முடிவு என்ன?
உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பேசும்போது, “தமிழகத்தில் குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பம் செய்த தகுதியுடைய நபர்களுக்கு குடும்ப அட்டைகள் வழங்கப்படுகிறது. அந்த வகையில் புதிய ஸ்மார்ட் கார்டுளுக்காக இதுவரை 7 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இவற்றில் 3 லட்சம் பேருக்கு புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் மற்ற விண்ணப்பங்களுக்கும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழக அரசின் அறிவுறுத்தல்களின் படி 15 நாட்களில் புதிய குடும்ப அட்டைகள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இதற்கிடையில் புதிய ரேஷன் அட்டைதாரர்கள் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் பொருட்களை பெற்றுக்கொள்ள அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த செய்தி